ETV Bharat / sports

பெங்களூருவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது கோவா! - ultimate table tennis 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2024, 6:49 AM IST

ULTIMATE TABLE TENNIS 2024: அல்டிமேட் டேபிள் டென்னிஸில் தொடரில் பெங்களூரு ஸ்மாஸர்ஸ் அணியை 8-4 என்ற கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது கோவா சாலஞ்சர்ஸ் அணி.

கோவா சேலஞ்சர்ஸ் அணியினர்
கோவா சேலஞ்சர்ஸ் அணியினர் (Credit - UTT 2024)

சென்னை: 8 அணிகள் பங்கேற்றுள்ள அல்டிமேட் டேபிள் டென்னிஸின் 5வது தொடர் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்.

அதன்படி, லீக் சுற்றின் முடிவில் கோவா சேலஞ்சர்ஸ், பெங்களூரு ஸ்மாஸர்ஸ், அகமதாபாத், மற்றும் டெல்லி ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதன் முதல் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், நடப்பு சாம்பியனான கோவா சாலஞ்சர்ஸ், பெங்களூரு ஸ்மாஸர்ஸ் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 8-4 என்ற கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது கோவா.

  • முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் மிஹாய் போபோசிகா, அல்வாரோ ரோபிள்ஸுடன் மோதினார். இதில் மிஹாய் போபோசிகா 2-1 (11-8, 11-7, 7-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
  • 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் யாங்சி லியு - மணிகா பத்ராவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் மணிகா பத்ரா 1-2 (11-4, 6-11, 4-11) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
  • 3-வதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஹர்மீத் தேசாய், யாங்சி லியு ஜோடியானது - அல்வாரோ ரோபிள்ஸ், மணிகா பத்ரா ஜோடியுடன் மோதியது. இதில் எழுச்சி கண்ட மணிகா பத்ரா, அல்வாரோ ரோபிள்ஸ் ஜோடி 2-1 (10-11, 7-11, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
  • 4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹர்மீத் தேசாய், பெங்களூரு ஸ்மாஸர்ஸ் அணியின் ஜீத் சந்திராவை எதிர்கொண்டார். இதில், ஹர்மீத் தேசாய் 3-0 (11-5, 11-6,11-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் கோவா சாலஞ்சர்ஸ் அணி 8-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கடைசி ஆட்டத்துக்கு முன்னதாகவே கோவா அணி 8 புள்ளிகளை எட்டியதால் மகளிர் ஒற்றையர் பிரிவில் யஷஸ்வினி கோர்படே, லில்லி ஜாங்குடன் மோத இருந்த ஆட்டம் கைவிடப்பட்டது. 2வது அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

இதையும் படிங்க: "கேட்காமலேயே குவியும் அரசின் உதவிகள்.." பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மனிஷாவின் தந்தை பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.