ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரில் கலந்து கொண்டு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இன்று காலை நாடு திரும்பினார். காலை 10.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் விரைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனை சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத்தின் உறவினர்கள் விமான நிலையும் முன் நீண்ட நேரம் காத்திருந்து வரவேற்பு அளித்தனர்.
Bajrang Punia. Neeraj Chopra.
— Abhijit Majumder (@abhijitmajumder) August 17, 2024
Their different ways of treating the Indian tricolour 🇮🇳 show who is the real champion, true patriot, and superior sportsperson. #Haryana pic.twitter.com/6ukJOCwYQg
வினேஷ் போகத்திற்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அவரைக் கண்டதும் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பண மாலை சூட வினேஷ் போகத் திறந்தவெளி காரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடையே, வினேஷ் போகத் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபடும் அவரது பயணித்த காரில் ஏறி நின்று கூட்டத்தை சரி செய்யும் பணியில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஈடுபட்டார்.
அப்போது காரின் பானட்டில் ஒட்டப்பட்டு இருந்த இந்திய மூவர்ணக் கொடியை அவர் அவமதித்ததாக கூறி வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக வெளியான வீடியோக்களில் நெட்டிசன்கள் அவரை வசைபாடி வருகின்றனர். பஜ்ரங் புனியா தவிர்த்து வினேஷ் போகத்தும் மூவர்ண கொடியை அவமதித்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலாகி வருகிறது.
खबरदार! Dont condemn Bajrang Punia for stepping on Tiranga or you'll be called Sanghi Bigot! He's great POLITICAL wrestler who refused to give Doping Test.
— BhikuMhatre (@MumbaichaDon) August 17, 2024
And had Vinesh shred those 100 gm tears before, she wouldn't have been disqualified for overweight. pic.twitter.com/VZUwt5FlCJ
முன்னதாக, நண்பர்கள் பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உறவினர்களுடன் திறந்த வெளி காரில் பயணித்த வினேஷ் போகத் கண்ணீர் மல்க ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய வினேஷ் போகத், ஒட்டுமொத்த உலகத்திற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய சாக்ஷி மாலிக், நாட்டுக்கான பணியை வினேஷ் நிறைவேற்றி உள்ளார். வெகு சிலருக்கு மட்டுமே நாட்ட்டை பெருமைப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அவருக்கான மரியாதையை நாம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னதாக குறிப்பிட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை நாடினார்.
ஆனால் தகுதி நீக்கத்திற்கு எதிராக வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டுக்கான நீதிமன்றம் நிராகரித்தது. இருப்பினும், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டுமென நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார். இதை முதலில் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், விரைவில் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்தது.
தொடர்ந்து மூன்று முறை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இறுதியில் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் வழங்கும் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. முன்னதாக மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லம்போர்கினி காரில் சும்மா ஸ்டைலா பறக்கும் ரோகித் சர்மா! 0264 கார் நம்பருக்கு என்ன அர்த்தம் தெரியுமா? - Rohit Sharma Car Viral Video