ETV Bharat / sports

பாரீஸ் ஒலிம்பிக்: முதல் நாளில் இந்திய வீரர்கள் யார் யாருக்கெல்லாம் போட்டி? - india Day 1 schedule paris olympics

பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் போட்டிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 10:21 AM IST

Etv Bharat
India contingent (Photo: Olympics 2024/X)

பிரான்ஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று (ஜூலை.26) கோலாகலமாக தொடங்கியது. மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 பந்தயங்கள் நடக்கின்றன. இந்த தொடரில் முதல் நாளான நேற்று போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை.

இந்நிலையில் 2ஆம் நாளான இன்று மொத்தம் 14 தங்கப் பதக்கங்களுக்கு போட்டிகள் நடக்கின்றன. பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல் சாம்பியனை நிர்ணயிக்கும் போட்டியாக துப்பாக்கி சுடுதல் நடைபெறுகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு போட்டி முதலில் நடைபெற உள்ளது.

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் தகுதி சுற்று போட்டி இந்திய நேரப்படி 12.30 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து இறுதி போட்டி மாலை 4 30 மணிக்கும் நடைபெறுகிறது. இதில் இந்திய தரப்பில் ரமிதா-அர்ஜூன் பாபுதா, தமிழக வீராங்கனை இளவேனில், சந்தீப்சிங் ஆகிய ஜோடிகள் களம் காணுகின்றன.

அதைத் தொடர்ந்து 12.30 மணிக்கு ஆண்களுக்கான சிங்கிள் ஸ்கல்ஸ் துடுப்பு படகு போட்டியின் தகுதி சுற்று நடைபெறுகிறது. இதில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் கலந்து கொள்கிறார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று (ஜூலை.27) இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு,

துப்பாக்கிச் சுடுதல்:

ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று சரப்ஜோத் சிங், அர்ஜூன் சிங் சீமா, பிற்பகல் 2 மணிக்கு போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று மனு பாகெர், ரிதம் சங்வான், மாலை 4 மணி போட்டி நடைபெறுகிறது.

டென்னிஸ்: மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதலாவது சுற்றில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா - ஸ்ரீராம் பாலாஜி இணை, பிரான்ஸ் நாட்டை பேபியன் ரிபோல் - ரோஜர் வாசெலின் ஜோடியை எதிர்கொள்கிறது.

பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் இந்திய வீரர் லக்‌சயா சென் - கவுதமாலா வீரர் கெவின் கோர்டானை இரவு 7.10 மணிக்கு எதிர்கொள்கிறார். அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி, பிரான்சின் லூகாஸ் கோர்வீ - ரோனன் லபார் ஜோடியை இரவு 8 மணி எதிர்கொள்கிறது.

பெண்கள் இரட்டையர் லீக் சுற்றில் இந்திய வீராங்கனைகள் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி தென் கொரியாவின் கோங் ஹீ யோங் - கிம் சோ யோங் இணையுடன் இரவு 11.50 மணிக்கு மோதுகிறது.

டேபிள் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் ஹர்மீத் தேசாய் - ஜோர்டான் வீரர் ஜாய்த் அபோ யமானை இரவு 7.15 மணிக்கு எதிர்கொள்கிறார்.

ஹாக்கி: ஆடவர் பிரிவின் லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இரவு 9 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

குத்துச்சண்டை: மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி பவார் - வியட்நாமை சேர்ந்த வோ தி கிம் அன் நள்ளிரவு 12 மணி அளவில் எதிர்கொள்கிறார்.

இதையும் படிங்க: பிரம்மாண்டமாக தொடங்கியது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா! - Paris Olympics 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.