பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 4*100 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலே நீச்சல் போட்டி நடைபெற்றது. நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைகளின் ஒப்பனை குறித்து பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் கருத்து தெரிவித்தார்.
நீச்சல் குளத்தில் இருந்து தங்கம் பதக்கம் வென்ற வீராங்கனைகள் முதல் அனைவரும் வெளியேறிய போது தனியார் நிறுவனத்தின் மூத்த ஊடகவியலாளர் பாப் பாலர்ட் கருத்து தெரிவித்தார். அவரது கருத்து பெண்கள் நீச்சல் வீராங்கனைகளின் ஒப்பனை குறித்து விமர்சிக்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில், நேரலையில் அவர் பேசியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை கண்டித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர். இந்நிலையில், பெண் நீச்சல் வீராங்கனைகள் குறித்து முகம் சுழிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மூத்த ஊடகவியலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தனியார் ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அருவறுக்கத்தக்க வகையில் நேரலையில் பெண் நீச்சல் வீராங்கனைகள் குறித்து கருத்து தெரிவித்த சம்பவத்தை தொடர்ந்து கமெண்டரி குழுவில் இருந்து பாப் பாலர்ட் உடனடி நடவடிக்கையாக நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை: கால் இறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி! - Paris Olympics 2024