ETV Bharat / sports

இந்திய அணி வெற்றி வாகை சூடியதற்கு முக்கியமான மூன்று காரணங்கள் இவைதான்! - T20 World Cup 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 4:36 PM IST

T20 World Cup 2024: டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கான மிக முக்கிய காரணங்களின் தொகுப்பை இக்கட்டுரையில் காண்போம்.

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி (Credits - IANS photo)

பார்படோஸ்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி, வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் கேன்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று (ஜூன் 29) நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.

விராட் கோலி - அக்‌ஷர் படேல் பார்ட்னர்ஷிப்: இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கான காரணங்களை பொறுத்தமட்டில், முதலாவது முக்கிய காரணம் விராட் கோலி - அக்‌ஷர் படேல் பார்ட்னர்ஷிப் தான். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி துவக்கத்திலேயே தடுமாற்றத்தை சந்தித்தது. கேப்டன் ரோஹித் சர்மா 9 ரன்களிலும், ரிஷப் பந்த் டக் அவுட் மற்றும் சூர்யகுமார் யாதவ் 3 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அப்போது இந்திய அணி 4.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்துக்கொண்டு இருந்தது. ஒருபுறம் இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்துக்கொண்டிருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக 5வது ஆட்டக்காரராக ஆல் ரவுண்டர் அக்‌ஷர் படேல் களமிறங்கினார்.

மற்றொரு துவக்கவீரர் விராட் கோலியுடன் கைக்கோர்த்த அக்‌ஷர் படேல் 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்க பெரிதும் உதவினார். அக்‌ஷர் படேல் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிஷ்டவசமாக விக்கெட் கீப்பர் டி காக்கால் ரன் அவுட் செய்யப்பட்டார். பின்னர் நிலைத்து நின்று ஆடிய விராட் கோலி 59 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 76 ரன்கள் விளாசினார். கடைசியில் வந்த துபேவும் (27 ரன்கள்) கைக்கொடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்து வலுவான ஸ்கோரை எட்டியது.

டெத் ஓவர்களில் மிரட்டல் பவுலிங்: இந்திய அணியின் வெற்றிக்கு மற்றொரு காரணம், டெத் ஓவர்களில் மிரட்டலாக பந்துவீச பும்ராவும், ஹர்த்திக் பாண்டியாவும் என்று தாராளமாக சொல்லலாம். 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்கா அணி டி காக்(39 ரன்கள்), ஸ்டப்ஸ்(31 ரன்கள்), கிளாசன்(52 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் வெற்றி வாய்ப்பை பறிக்கும் நோக்கில் நகர்ந்து கொண்டிருந்தது. கடைசி 24 பந்துகளில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 17வது வீச ஹர்திக் பாண்டியா அழைக்கப்பட்டார். இவர் ஓவரில் கிளாசன் விக்கெட்டை எடுத்து 4 ரன்கள் மட்டுமே வழங்கினார். பின்பு 18வது ஓவரை வீசிய பும்ரா இரண்டு ரன்களோடு யான்சன் விக்கெட்டை வீழ்த்தினார். பின்பு 19 ஒவர் வீசிய அர்ஷ்தீப் சிங்கும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுக்கோப்பாக பந்து வீச, கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு தென் ஆப்பிரிக்கா தள்ளப்பட்டது.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய கேட்ச்: கடைசி ஓவரையும் ஹர்திக் பாண்டியா வீசினார். ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர் அதை சிக்சருக்கு தூக்கி அடித்தார். அப்போது எல்லைக் கோடு அருகே நின்று கொண்டு இருந்த சூர்யகுமார் யாதவ் அதை லாவகமாக பிடித்து அசத்தினார். அதுவரை தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம் செலுத்தியிருந்த இப்போட்டி இந்திய அணியின் பக்கம் திரும்பியது. ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் திருப்பு முனையாக சூர்யகுமாரின் கேட்ச் அமைந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய குறிப்பிடத்தக்க காரணங்களால் இந்திய அணி டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் வென்று, வெற்றி மகுடத்தை சூடியது என்பது விளையாட்டு விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க: ஆட்ட நாயகன் சூர்யகுமார் யாதவ்! ஒரே கேட்ச்சால் ஆட்டம் திசை மாறியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.