புடாபெஸ்ட்: 45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஹங்கேரியில் நடைபெற்று வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில் 8 சுற்றுகளில் தொடர் வெற்றி பெற்ற இந்தியா, 9வது சுற்றில் நடப்பு சாம்பியனான உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி டிராவானது.
10வது சுற்றில் அமெரிக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் முதல் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ் - ஃபேபியானோ கருவானா வீழ்த்தினார். இதனையடுத்து நடைபெற்ற போட்டியில் அமெரிக்க வீரர் வெஸ்லி சோவிடம், பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவினார்.
🇮🇳 India defeats 🇺🇸 USA in Round 10 of the #ChessOlympiad with a 2.5-1.5 score!
— International Chess Federation (@FIDE_chess) September 21, 2024
The match began with a victory for Wesley So over Praggnanandhaa R, giving the USA an early 1-0 lead. But India quickly bounced back as World Championship Challenger Gukesh D took down World #3… pic.twitter.com/aG0tXxfXTL
இருப்பினும், இறுதியாக நடைபெற்ற போட்டியில் அர்ஜூன் எரிகாசி, அமெரிக்காவின் லெனியர் டோமின்குயிசை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தார். இதன் மூலம் 19 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் சீனா 17 புள்ளிகளுடன் இருக்கிறது. 16 புள்ளிகளுடன் ஸ்லோவேனியா 3வது இடத்தில் உள்ளது.
வரலாற்று வெற்றி பெறுமா இந்தியா? 11வது சுற்றில் இந்திய அணி - ஸ்லோவேனியாவையும், சீனா - அமெரிக்காவையும் எதிர்கொள்ள இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா தோற்று சீனா வெற்றி பெற்றால், இரு அணிகளும் முதல் இடத்தைப் பகிர்ந்து கொள்ளும். இதன் பின்னர் டைபிரேக்கர் மூலம் யார் வெற்றியாளர் என்பது முடிவு செய்யப்படும்.
Standings | Round 10 | Open | 45th FIDE #ChessOlympiad
— International Chess Federation (@FIDE_chess) September 21, 2024
Check out the overall standings 👇
🔗 https://t.co/2fh7aHo3UU pic.twitter.com/J1uHDFSsmA
இந்திய மகளிர் அணி: 10 சுற்றுகள் நிறைவு பெற்று இருக்கும் நிலையில், இந்திய மகளிர் அணியும் தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறது. தற்போது 17 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அதே 17 புள்ளிகளுடன் 2வது இடத்தில் கஜகஸ்தானும், 16 புள்ளிகளுடன் 3வது இடத்தில் அமெரிக்காவும் உள்ளது.
வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் 11வது சுற்றில், இந்திய மகளிர் அணி - அஜர்பைஜான் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமேயானால், தங்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. செஸ் ஒலிம்பியாட்டில் 2014 மற்றும் 2022இல் இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா 2020இல் கோவிட்-19 இன் போது நடந்த ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில், ரஷ்யாவுடன் தங்கத்தைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி; மகாராஷ்டிராவை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய தமிழ்நாடு!