சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 5-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியினை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த தொடரில் அகமதாபாத் எஸ்.ஜி.பைப்பர்ஸ், சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி, கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ், பெங்களூரு ஸ்மேஷர்ஸ், புனேரி பல்தான் டிடி, யு மும்பா டிடி என மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றுள்ளன. இதில் ஒரு அணி தனது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை பலப்பரீட்சை நடத்தும்.
அந்த வகையில் ஒவ்வொரு அணியும் 5 போட்டிகளில் விளையாடும். லீக் சுற்றில் மொத்தம் 20 ஆட்டங்கள் இடம்பெறும். இந்த தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் 2 ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்கள், 2 மகளிர் ஒற்றையர் ஆட்டங்கள் மற்றும் 1 கலப்பு இரட்டையர் ஆட்டம் என மொத்தம் 5 ஆட்டங்கள் நடத்தப்படும். இதன் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
சென்னை vs டெல்லி: அதன்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தபாங் டெல்லி அணி மற்றும் சென்னை லயன்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற லீக் போட்டியில் 8-7 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.
Clean sweep ✅
— Ultimate Table Tennis (@UltTableTennis) August 25, 2024
First ever UTT win ✅
2️⃣1️⃣-year old 🌟 Diya Chitale is your IndianOil Player of the tie ⏩ Chennai Lions v Dabang Delhi T.T.C 🤩❤️
📲 Watch IndianOil #UTT2024 live on JioCinema and Sports18 Khel in India and on Facebook Live outside India… pic.twitter.com/BC2f9r98zy
முதலில் நடைபெற்ற ஆண்களுக்கான போட்டியில் சென்னையின் நட்சத்திர வீரர் சரத்கமல், டெல்லி அணியின் ஆன்ட்ரிஸ் லிவன்கியை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று புள்ளி கணக்கைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மகளிர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆகிய இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது முன்னிலை வகித்தது.
இருப்பினும், கடைசியாக நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் போட்டியில் சென்னை அணி 3-0 என்ற கணக்கில் தோல்வியுற்றது. மிகவும் சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் டெல்லியை 8-7 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: அவ்வளவு மோசமானவரா ஹர்திக் பாண்டியா? நடாஷாவுடனான விவகாரத்தின் அதிரும் பின்னணி!