ETV Bharat / sports

சென்னையில் முதன்முதலாக டென்னிஸ் நாக் அவுட் சாம்பியன்ஷிப் போட்டி.. எப்போது துவக்கம்? - TENNIS KNOCKOUT CHAMPIONSHIP - TENNIS KNOCKOUT CHAMPIONSHIP

Tennis knockout championship: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் பங்குபெறும் டென்னிஸ் கிளப்களுக்கு இடையேயான நாக் அவுட் சாம்பியன்ஷிப் போட்டி முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தினர்
தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தினர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 25, 2024, 6:45 PM IST

சென்னை: இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் பங்குபெறும் டென்னிஸ் கிளப்களுக்கு இடையிலான நாக் அவுட் சாம்பியன்ஷிப் போட்டி முதல் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முதல் முறையாக "RWD ஓபன் சென்னை சிட்டி கிளப் லீக் நாக்அவுட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2024" போட்டி நடத்துவதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவைச் சார்ந்த டென்னிஸ் போட்டியின் முன்னணி வீரர்களான சோம்தேவ் தேவ் வர்மன், விஜயலட்சுமி மற்றும் மாநில முன்னணி வீரர்கள் பங்குபெறும் கிளப்களுக்கு இடையேயான டென்னிஸ் போட்டி 45 நாட்கள் நடைபெறும் என்றும், இதில் 5 இரட்டையர்கள் பிரிவுகள் உள்ளடக்கிய 30 வயதுக்கு மேற்பட்டோர், 35 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர், 55 வயதுக்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த போட்டி நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் கௌரவ செயலாளர் பிரேம்குமார் கூறியதாவது, “எந்த விளையாட்டுக்கும் வயது ஒரு தடை கிடையாது எனவும், எல்லா கிளப்களிலும் சிறுவர்கள் விளையாடுவதில்லை எனவும், வயதானவர்கள் தான் விளையாடி வருவதாக தெரிவித்தார். இந்த விளையாட்டில் கிளப் அளவில் எல்லோரும் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் 45 நாட்கள் இந்த தொடர் நடைபெறுவதாக தெரிவித்தார். இந்த போட்டிக்காக மட்டும் மொத்தம் ஆர்எம்டி நிறுவனம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பரிசுத் தொகைக்காக ரூபாய் 2 இரண்டு லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் முதலிடம் பெறும் அணிக்கு ஒரு லட்சமும் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். சென்னையில் உள்ள 13 டென்னிஸ் கிளப்களில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது என்றும், போட்டியை அனைவரும் வந்து காண அனுமதி இலவசம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆர்எம்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அபிப் கூறுகையில், எனக்கு டென்னிஸ் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் இருக்கிறது என்றும், நானும் ஒரு டென்னிஸ் வீரர் தான் எனத் தெரிவித்தார். எனவேதான் இந்தப் போட்டிக்காக ஸ்பான்சர் செய்துள்ளதாக கூறினார். குறிப்பாக, கிரிக்கெட்டைத் தவிர மற்ற போட்டிகளுக்கு ஸ்பான்சர் இங்கே குறைவாக இருப்பதாக கூறிய அவர், வருங்கால சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விளையாட்டுக்கு ஸ்பான்சர் செய்கிறோம் எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "ஒரு அத்தியாயத்தின் முடிவல்ல புதிய சகாப்தத்தின் தொடக்கம்" - இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.