ஐதராபாத்: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலன்கா, உள்ளூர் வீராங்கனை வலியன்ட் ஜெசிக்காவை எதிர்கொண்டார்.
வெற்றிக்காக இருவர்ம் கடுமையாக போராடினர். ஏறத்தாழ 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலன்கா 7-க்கு 5, 7-க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை உச்சி முகர்ந்தார். உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அரினா சபலன்கா, நடப்பாண்டில் இரண்டாவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.
Aryna almost went for the tiramisu check 😂 pic.twitter.com/sPMikkpMjF
— US Open Tennis (@usopen) September 7, 2024
தொடர்ந்து 2வது கிராண்ட்ஸ்லாம்:
முன்னதாக ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரையும் அரினா சபலன்கா கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அரினா சபலன்கா இதுவரை மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி உள்ளார்.
அதேபோல் 26 வயதான அரினா சபலன்கா 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரே ஆண்டில் இரண்டு பிரதான தொடர்களை கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார். இதற்கு முன் 2016ஆம் ஆண்டு ஏஞ்சலிக்யு கெர்பர் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசுத் தொகை இவ்வளவா?
Aryna never gave up on her dream.
— US Open Tennis (@usopen) September 7, 2024
And now she's a US Open champion. pic.twitter.com/m21bVFNB0U
அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற அரினா சபலன்காவுக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. இந்திய மதிப்பில் 30 கோடியே 23 லட்ச ரூபாயை அரினா சபலன்கா பரிசுத் தொகையாக பெற்று உள்ளார். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை காட்டிலும் இது 20 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது இடம் பிடித்த உள்ளூர் வீராங்கனை வலியன்ட் ஜெசிக்காவுக்கு 15 கோடியே 11 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இதில் அரினா சபலன்காவுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை கடந்த ஐபிஎல் சீசனில் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வழங்கப்பட்ட தொகையை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
2021 - Semifinal
— US Open Tennis (@usopen) September 7, 2024
2022 - Semifinal
2023 - Final
2024 - 🏆 https://t.co/kneJ6KeaHs pic.twitter.com/iHoNm23ba9
ஐபிஎல்லை மிஞ்சிய அமெரிக்க ஓபன்:
கடந்த ஐபிஎல் சீசனில் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஒட்டுமொத்தமாக 20 கோடி ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அரினா சபலன்கா என்ற ஒருவருக்கு 30 கோடியே 23 லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டு இருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது.
Lucky all the way! pic.twitter.com/rpCWwwtGO4
— US Open Tennis (@usopen) September 7, 2024
இதையும் படிங்க: Paralympics: இந்திய வீரர் நவதிப் தங்கம்! ஈரான் வீரரிடம் தங்கம் பறிப்பு! என்ன காரணம்? - Paris Paralympics Navadeep won gold