ETV Bharat / sports

IND Vs ENG : வாஷிங்டன் சுந்தர் திடீர் நீக்கம்! இந்திய டெஸ்ட் அணியில் அடுத்தடுத்த அதிரடி? 5வது போட்டி வசமாகுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 3:10 PM IST

IND Vs ENG 5th Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

தர்மசாலா : இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி ஐதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து விசாகபட்டினத்தில் கடந்த 2ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்திலும், பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கிய 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது. தசைப்பிடிப்பு காயம் காரணமாக 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் முழுமையாக குணமடையாததால் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

வலைப் பயிற்சியில் கே.எல்.ராகுல் ஈடுபட்ட போது, மீண்டும் தசைப் பகுதியில் வலி ஏற்பட்ட நிலையில், அவர் லண்டன் சென்று சிகிச்சை பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரைஇறுதி போட்டியில் விளையாடுவதற்காக வாஷிங்டன் சுந்தர் அணியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளார்.

கே.எல்.ராகுலுக்கு பதிலாக அணியில் இடம் பிடித்த ரஜத் படிதார் தனது வாய்ப்பை வீணடித்து வருவது போல் தெரிகிறது. கடந்த 6 இன்னிங்ஸ்களில் ரஜத் படிதர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகிறார். அதனால் கடைசி ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

அதேபோல், 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ஜஸ்பிரீத் பும்ரா, மீண்டும் அணியில் இணைந்து உள்ளார். சுழற்பந்து வீச்சை பொறுத்தவரை அஸ்வின், ரவீந்தர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தொடர்ந்து நீடிக்கின்றனர். அஸ்வின் தனது 100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மார்ச் 7ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப்.

இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்: ராகுல் விலகல்? இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.