ETV Bharat / sports

Watch: ஒரே பந்து 7 ரன்.. ஒய்டும் இல்லை... நோ பாலும் இல்லை... அது எப்படி திமிங்கலம்?

ஒரு பந்தில் 7 ரன், ஒய்டும் இல்லை, நோ பாலும் இல்லை, அது எப்படி சாத்தியமானது என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

Etv Bharat
Representative Image (Getty Images)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

ஐதராபாத்: கடந்த 1981ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 500 ரன்கள் குவித்தது.

பாக். - ஆஸ். டெஸ்ட் தொடர்:

அந்த அணியில் முடாசர் நசர் (95 ரன்), மஜித் கான் (74 ரன்), ஜாவித் அப்பாஸ் (90 ரன்), வாசிம் ராஸா (50 ரன்), இம்ரான் கான் (70 ரன்) ஆகியோர் அபாரமாக விளையாடி அணி 500 ரன்களை கடக்க உதவியாக இருந்தனர். பாகிஸ்தான் அணி 500 ரன்களை தாண்டியதை அடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியால், பாகிஸ்தான் பந்துவீச்சு வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. சொற்ப ரன்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட்டாகி நடையை கட்டினர். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 293 ரன்களில் சுருண்டது. பாலோ ஆன் ஆகிய ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடியது.

ஆஸ்திரேலியாவை வென்ற பாகிஸ்தான்:

இருப்பினும் ஆஸ்திரேலிய வீரர்களால் பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு பதில் கொடுக்க முடியவில்லை. நேர்த்தியான பந்துவீச்சின் மூலம் தொடர்ந்து அதிரடி தாக்குதல் தொடுத்த பாகிஸ்தான் வீரர்கள் இறுதியில் ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது இன்னிங்சில் 125 ரன்களுக்குள் சுருட்டினர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் தான் பாகிஸ்தான் வீரர் மஜித் கான் புதிய வரலாற்று சாதனை ஒன்றை மிக அசால்ட்டாக படைத்தார். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் வீசிய பந்தில் 7 ரன்களை திரட்டி மஜித் கான் ஆச்சரியப்படுத்தினார். இதில் கூடுதல் சுவாரஸ்யத்தக்க தகவல் என்றால் அந்த பந்து ஒய்டும் போகவில்லை, நோ பாலும் இல்லை, அதேநேரம் அந்த பந்தில் மஜித் கான் பவுண்டரியும், சிக்சரும் கூட அடிக்கவில்லை.

ஒரே பந்து 7 ரன்:

ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லி வீசிய பந்தை பவுண்டரி லைன் நோக்கி அடித்த மஜித் கான், வேகமாக ரன் எடுக்க ஓடினார். அந்த மைதானம் சற்று அளவில் பெரியது என்பதால் பீல்டர் சென்று பந்தை எடுத்து தூக்கி எறிவதற்குள் மஜித் கான் 4 ரன்கள் வரை எடுத்துவிட்டார். அதேநேரம் பீல்டர் வீசிய பந்து விக்கெட் கீப்பர் கையில் சிக்காமல் ஓவர் த்ரோவாக மாற அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மஜித் கான் மீண்டும் ஓடி 3 ரன்களை திரட்டினார்.

ஆக மொத்தம் அந்த ஒரு பந்தில் பாகிஸ்தான் வீரர் மஜித் கான் 7 ரன்களை ஓடிய எடுத்தார். அதேநேரம் இது போன்று ஒரே பந்தில் 7 ரன்கள் எடுக்கப்பட்ட சம்பவம் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை நடந்துள்ளன. இங்கிலாந்து வீரர் ஆலென் நாட், ஆஸ்திரேலியாவின் மேத்யூ ரென்ஷா, நியூசிலாந்து வீரர் வில் யங் ஆகியோர் இது போல் சாதனை படைத்துள்ளனர். ஆனால் இவர்களின் சாதனைகளின் இருந்து மஜித் கான் சற்று வித்தியாசமாகவும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் காணப்படுகிறார்.

இதையும் படிங்க: ATP Finals: 54 ஆண்டுகால டென்னிஸ் வரலாற்றில் முதல் முறை! சாதனை படைத்த அமெரிக்க வீரர்! என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.