ராவல்பிண்டி: வங்கதேசம் அணி பாகிஸ்தானில் சுற்றுபயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஷான்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக சவுத் சகீல் 141 ரன்களும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 171 ரன்களும் எடுத்தனர். தொடக்க வீரர் சயிம் அயுப் 56 ரன்கள் குவித்தார். வங்கதேச அணியின் ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மகுமுத் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், மெகிதி ஹசன், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Bangladesh win the first Test by 10 wickets 🏏#PAKvBAN | #TestOnHai pic.twitter.com/436t7yBaQk
— Pakistan Cricket (@TheRealPCB) August 25, 2024
தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய வங்கதேசம் அணி 167. 3 ஓவர்கள் முடிவில் 565 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. வங்கதேச வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.
முதல் இன்னிங்சில் 171 ரன்கள் குவித்த முகமது ரிஸ்வான், இரண்டாவது இன்னிங்சில் தன் பங்குக்கு 51 ரன்கள் மட்டும் குவித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 55.5 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேசம் அணியின் சார்பில் மெகதி ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
Bangladesh 🆚 Pakistan | 1st Test | Rawalpindi
— Bangladesh Cricket (@BCBtigers) August 25, 2024
Bangladesh won by 10 wickets 👏🇧🇩
PC: PCB#BCB #Cricket #BDCricket #Bangladesh #PAKvBAN #WTC25 pic.twitter.com/yqNmaQ6rsL
அவரைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மகுமுத், நஹித் ரானா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து வெறும் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் அணி விளையாடியாது.
6.3 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியை பதிவு செய்து வங்கதேசம் அணி வரலாற்று சாதனை படைத்தது.
இதையும் படிங்க: கொல்கத்தாவின் கேப்டனாகும் மும்பை நட்சத்திரம்! நிச்சயமா ரோகித் சர்மா இல்லை! வேற யார்? - KKR New Captain