பாரிஸ்: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன. இதில் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியாவின் சார்பாக மட்டும் மொத்தம் 16 பிரிவுகளில் 117 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று இரவு வீரர்கள் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை என ஒலிம்பிக் தொடக்க விழா களைகட்டிய நிலையில், முதலாம் நாளான இன்று துடுப்புப்படகு போட்டியான ரோவிங் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் உடன் 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் இந்திய வீரரான பால்ராஜ் பன்வார் தொடக்கத்தில் முதலாவதாக வந்தபோதிலும், இறுதியில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவர் 7:07:11 வினாடிகளில் இலக்கு தூரத்தைச் சென்றடைந்து நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
#TOPSchemeAthlete and star rower @balraj_rowing finishes 4th with a timing of 07:07.11 on Day 1 of #ParisOlympics2024 in Men’s Single Sculls Heats.
— SAI Media (@Media_SAI) July 27, 2024
He progresses to the Repechage round scheduled tomorrow 1:05 PM IST onwards.
Let’s #Cheer4Bharat and let’s support Balraj 👍🏻 pic.twitter.com/rWVHOzxJV0
இந்த போட்டியில் எகிப்து நாட்டைச் சார்ந்த வீரர் எல்பனா முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் 7:05:6 வினாடிகளில் கடந்துள்ளார். அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடித்த கிரீஸ் நாட்டைச் சார்ந்த டோஸ்க்கோ 7:01:79 வினாடிகளில் கடந்துள்ளார். மேலும் மூன்றாவது இடத்தை நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த வீரர் மகிண்டோஸ் பிடித்துள்ளார். இவர் 6:55:92 வினாடிகளில் கடந்துள்ளார். இந்நிலையில், இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 4ஆம் இடம் பிடித்ததால் தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில், தகுதிச் சுற்றுக்கான வாய்ப்பை பெற நாளை நடைபெறும் ரெபகேஜ் சுற்றில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்ததாக, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். முதல் 8 இடங்களைப் பெறுபவர்கள் இறுதிச்சுற்று தகுதி பெறுவார்கள். இந்நிலையில், இவர் தகுதிச்சுற்றில் 580 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கத்தை வென்றே நாடு திரும்புவோம்.. சரத் கமல் உறுதி!