பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று (ஜூலை.29) நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் பபுதா விளையாடினார்.
🇮🇳💔 𝗛𝗲𝗮𝗿𝘁𝗯𝗿𝗲𝗮𝗸 𝗳𝗼𝗿 𝗔𝗿𝗷𝘂𝗻! It was just not meant to be for Arjun Babuta as he narrowly came up short in the final of the men's 10m Air Rifle event.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 29, 2024
🔫 A 9.9 in his 13th shot proved to be costly for him in the end. He just missed out on a medal finishing 4th.… pic.twitter.com/wJngf0S2Ip
தொடக்க முதலே அபாரமாக விளையாடி வந்த அர்ஜூன் பபுதா பதக்கத்திற்கான வாய்ப்பில் நீடித்து வந்தார். வெளியேற்றுதல் சுற்றுகளில் முறையே 10.6 மற்றும் 10.8 அதையடுத்து 9.9 மற்றும் 10.6 என அடுத்தடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது இடத்தில் முன்னிலை வகித்து வந்தார்.
இருப்பினும் தனது 13வது மற்றும் கடைசி முயற்சியில் 9.9 புள்ளிகள் மட்டுமே எடுத்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை இழந்தார். இதன் மூலம் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் பதக்க கனவு நிராசையாக போனது.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: லக்சயா சென், சாத்விக்சாய் - சிராக் ஷெட்டி அபாரம்! மகளிர் பிரிவில் தொடர் பின்னடைவு! - paris olympics 2024