ETV Bharat / spiritual

மாணவர்களுக்கும், காதலர்களுக்கும் இந்த வாரம் அமோகமாக இருக்கும்.. எந்தெந்த ராசிக்குத் தெரியுமா? - Weekly Horoscope in Tamil - WEEKLY HOROSCOPE IN TAMIL

Weekly Horoscope in Tamil: செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் 7ஆம் தேதி வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்களைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 8:08 AM IST

மேஷம்: செலவுகள் அதிகரிக்கக்கூடும், ஆனால் பயணம் முடியும் வரை அது உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். பழைய நண்பர்களை சந்தித்து எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் கவலைப்படுவீர்கள். சில பொருட்களை வாங்குவதில் ஏற்படும் சந்தோஷமானது உங்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். எந்தவொரு புனித யாத்திரையும் அல்லது மங்களகரமான பயணமும் உங்களுக்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் மிகவும் பயனளிக்கும்.

வியாபாரிகள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த அதிக முதலீடு செய்யலாம். அதிகாரிகள் வழக்கம்போல் தங்கள் அலுவலை மேற்கொள்ளலாம். நீண்ட விடுமுறையை உங்கள் குடும்பத்துடன் செலவிட வாய்ப்புள்ளது. இந்த வாரம், உயர் கல்விக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மன உறுதியில் சற்று தளரவும் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமமும் இருக்கலாம்.

எப்போதும் போல் கல்வி பயிலும் குழந்தைகள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காயம் ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே எச்சரிக்கையாக இருங்கள். அன்றாட வழக்கத்தில் உடல் பயிற்சிகளை செய்வதின் மூலம் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும்.

ரிஷபம்: இந்த வாரம் சிறந்த நன்மைகளை அடைவீர்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. அறிவு மற்றும் மன உறுதி அதிகரிக்கச் சிறந்த வாய்ப்புள்ளது. காதல் மற்றும் அறிவுசார் உறவுகளில் ஆர்வம் அதிகரிக்கும். குழுப்பணி மற்றும் பரஸ்பர ஆதரவு உணர்வு வளர்க்கப்படும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்பும், ஒருவர் மேல் ஒருவர் வைத்திருப்பீர்கள். ஆழ்ந்த அக்கறையின் காரணமாக குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் மாறும்.

வாழ்க்கையின் சவால்களை எவ்வாறு அமைதியாக வழிநடத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மற்றொருவரை தங்களின் வழிகாட்டிகளாகப் பார்ப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் ஆன்மீக விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும். தனிநபர்கள் தெய்வ வழிபாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

பெண்களின் ஆதரவு மற்றும் லட்சுமி தேவியின் கடாக்ஷம் தொடர்ந்து இருப்பதால் பொருளாதார சூழல் சாதகமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக புதிய தொழில் வாழ்க்கை அல்லது தனிப்பட்ட வளர்ச்சியைத் தேடுபவர்களுக்கு இந்த வாரம் பொருத்தமானது.

மிதுனம்: இந்த வாரம் மகிழ்ச்சியைத் தருவதாகவும், செய்யாமல் விட்டதை முடிக்க உதவுவதாகவும் இருக்கும். உறவுகளுக்கிடையேயான இடைவெளிகளைக் குறைத்து அன்பிற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். வார இறுதியில், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வளரச் செய்யும். திருமணமானவர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் திருப்தியைக் காண்பார்கள். அவர்களின் ஆசைகள் நிறைவேறும்.

கல்வி கற்பதற்காக அதிகம் செலவு செய்ய வேண்டும், அதற்கு அதிக அளவில் நிதி முதலீடு தேவைப்படலாம். எனவே உங்கள் பட்ஜெட்டை திட்டமிடுவது புத்திசாலித்தனம். இந்த காலம் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு ஏற்றது. ஏனெனில், இது உங்களுக்கு விருப்பமான பாடத்தைப் பற்றிய உங்கள் புரிதலை ஆழப்படுத்தும். உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள் மற்றும் உங்கள் அறிவை விரிவுபடுத்துவீர்கள்.

ஆசிரியர்கள் உங்களுக்கு ஆதரவையும், வழிகாட்டுதலையும் வழங்குவார்கள். கூடுதலாக, நீங்கள் ஒரு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல லாபகரமான காலகட்டமாக இருக்கலாம். தொழில்முனைவோர் அவர்கள் மேற்கொள்ளும் பயணங்களால் பயனடைவார்கள்.

கடகம்: இந்த வாரம் குடும்பத்தில் கவனம் செலுத்துவீர்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு பயனடைவீர்கள். மங்களகரமான வேலைகள் மற்றும் சங்கீர்த்தனம் போன்றவற்றில் ஈடுபடும் போது மகிழ்ச்சியையும், அமைதியையும் அனுபவிப்பீர்கள். திருமணமான நபர்களுக்கு காதல் மற்றும் அன்புக்காக என்றே அர்ப்பணிக்கப்பட்ட வாரம். ஆகவே இது குடும்பத்தில் மகிழ்ச்சியையும், முன்னேற்றத்தையும் வளர்க்கிறது.

குடும்பங்கள் முக்கியமான பரிசுகளையும் பெறலாம். பொருளாதாரம், மனம் மற்றும் சமூக சூழ்நிலைகள் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சரியான நேரத்தில் வேலையை முடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் வர்த்தகர்கள் கல்வி மற்றும் புதிய கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும். இந்த காலகட்டத்தில் கல்வி மிகவும் எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதால் கற்றலுக்கு ஏற்றது.

உடல்நலம் ஒரு பெரிய கவலைக்குரியது அல்ல, ஆனால் தொற்று நோய்களுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். வெளி உணவைக் குறைவாக சாப்பிடுவது மற்றும் உணவு, தண்ணீர் அருந்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்: வரவிருக்கும் வாரம் சில சவால்களை முன்வைக்கும். நீங்கள் மிகவும் சோர்வாக உணரலாம் மற்றும் பணிகளை முடிக்க வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்திற்குள் சற்று பதற்றம் அதிகரிக்கலாம். ஆனால், கடினமான காலங்களில் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவு உங்களுக்கு கை கொடுக்கும். நீங்கள் ஒரு சில சிறிய பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலில் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் போது, புதிய வாய்ப்புகள் உங்கள் கதவைத் தட்டும்.

நீங்கள் செய்த முதலீடுகள் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் சிறந்த நிதி நிலைமைகளுக்கு வழிவகுக்கும். மறுபுறம், உங்களுக்கு பல ஆச்சரியங்களும் காத்திருக்கலாம். தங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்குபவர்கள், தற்போதைய படிப்பைப் புறக்கணிக்காமல் மனதை ஒருமுகப்படுத்தி மிகவும் கவனமாக கற்க வேண்டும். நல்வாழ்வைக் கவனித்துக்கொள்வதும், மிக அதிகமாக உழைப்பதையும் தவிர்ப்பது முக்கியம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காததாலும், போதுமான இரும்புச்சத்து கிடைக்காததாலும் உடல் ரீதியாக, நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

கன்னி: இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரம். உங்களுக்கு ஆரம்பத்தில் சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம், ஆனால், பின்னர் சரியாக மாறக்கூடும். பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். திருமணமான நபர்கள் தங்கள் தனிப்பட்ட விஷயங்களுக்கு ஆதரவைப் பெறலாம். பழைய மோதல்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படும். வியாபாரம் லாபகரமாக இருக்கும், அரசுத் திட்டங்கள் நன்மைகளை வழங்கும்.

அரசாங்கப் பதவிகளுக்காக வேலை தேடுபவர்கள் வெற்றி பெறலாம். காதல் உறவுகள் நிலையானதாக இருக்கலாம், ஆனால் பழைய நண்பர்களிடமிருந்து அதிக பாசத்தைக் காண்பீர்கள். அரசியல் ரீதியாக, நீங்கள் வெற்றியை அடைய முடியும். பொருளாதார நன்மைகளை அனுபவிக்க முடியும். சமூக ரீதியாக, உங்கள் நடைமுறை திறன்கள் மற்றும் அமைதியான நடத்தை காரணமாக உங்கள் நிலை உயரக்கூடும்.

இது உயர்ந்த சமூக நிலைக்கு வழிவகுக்கும். இருப்பினும், பெற்றோர் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் பொருத்தமான துணையைக் காணலாம். தம்பதிகளுக்கிடையேயான அன்பு ஆழமானதாகும். மேலும், புதிய நபர்களைச் சந்திப்பது உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்.

துலாம்: இந்த வாரம் செழிப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தியோகத்தில் இருப்பவர் எனில், வேலையில் முக்கியமான கடமைகள் உங்கள் கைக்கு வந்து சேரும். இவற்றை சரியாக கையாள, அதிக முயற்சியையும், புத்திசாலித்தனத்தையும் உபயோகிக்க வேண்டும். கூடுதலாக, இது உங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கலாம்.

ஆகவே, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம் செய்யும் துலாம் ராசிக்காரர்கள் தங்கள் மதிப்பை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டு மற்ற தொழில்முனைவோருடன் போட்டியிடுவதைக் காணலாம். துலாம் ராசியில் உள்ள தம்பதிகள், தங்களின் குடும்ப பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நண்பரின் உதவியை நாடி அதை வெற்றிகரமாக சரி செய்வார்கள்.

காதல் துணையின் மீது நீங்கள் காட்டும் அன்பு வளர வாய்ப்புள்ளது. ஆகவே இருவரும் ஒன்றாக இணைந்து சுவாரஸ்யமான தருணங்களை அனுபவிப்பீர்கள். இந்த வாரம் இல்லறத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும் நிரம்பி வழியும். இது உங்கள் குடும்பத்துடன் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாகும்.

விருச்சிகம்: இந்த வாரம் மிகவும் சாதகமான வாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் நிலுவையில் உள்ள பல முடிக்கப்படாத பணிகள் செய்து முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இது பாசிட்டிவ்வான விளைவுகளுக்கு வழிவகுக்கும். வாரத்தின் தொடக்கத்தில், நீண்டகாலமாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அல்லது சட்ட விஷயங்களைத் தீர்ப்பதற்கு சாதகமான காலம்.

ஒரு குறிப்பிட்ட துறையில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். மேலும், மற்றவர்கள் உங்கள் சாதனைகளை அங்கீகரிப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படலாம். வேலையில் உள்ளவர்கள் நிதி நிலைமை மேம்படச் செய்ய புதிய வழிகள் உருவாகும். மேலும், உங்கள் செல்வ வளம் அதிகரிக்கும். தொழில்முறை முயற்சிகள் மற்றும் நிதி நிலைமையில் உங்களுக்கு ஏற்பட்ட ஸ்திரத்தன்மை போன்ற வெற்றிகள், உங்களை உற்சாகமானவராகவும், வலிமை மிக்கவராகவும் ஆக்கும்.

வருவாயை அதிகரிக்க புதிய திட்டங்களைத் தொடங்க இது சிறந்த நேரம். கூடுதலாக, நீங்கள் ஒரு குறிப்பிடத்தக்க ஒப்பந்தத்தைப் பெறலாம். இந்த வாரம் தொழில் முன்னேற்றம் மற்றும் வணிக வளர்ச்சிக்கான ஒரு முக்கிய தருணம். உங்கள் எண்ணங்கள் தெய்வீக காரியங்கள் மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஆக்கிரமிக்கப்படும்.

தனுசு: இந்த வாரம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் அதன் பயனை உண்மையிலேயே அடைய சோம்பல் மற்றும் கர்வத்திற்கு அடிபணிவதைத் தவிர்க்க வேண்டும். நேரம் யாருக்காகவும் நிற்காது என்பது மிக முக்கியம். மேலும், நீங்கள் எடுக்கும் எந்த இடைநிறுத்தமும் முன்னேற்றத்திற்குத் தடையாகலாம். ஏதேனும் வேலை பொறுப்புகளை ஏற்றுக் கொண்டால், அவற்றை மிகவும் திறம்படச் செய்து முடிக்க வேண்டியது தான் உங்கள் இலக்கு.

கூடுதலாக, போட்டியாளர்களுக்கு எதிராக விழிப்புடன் இருங்கள். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாபெரும் அதிர்ஷ்டம் கிட்டும் என்பது உறுதி. அதனால், நிதி இலக்குகளை அடைவீர்கள். உங்களுக்கு முக்கியமான ஒரு நபருடன் இன்பமான தருணங்களை அனுபவிக்க இது ஒரு சிறந்த நேரம். திருமண வாழ்க்கை நிறைவாக இருக்கும்.

மாணவர்கள் சாதனைக்கான வெற்றிக் கனியை எட்டிப்பிடிப்பர்கள். இருப்பினும், அதிகப்படியான நம்பிக்கை அவர்களின் கவனத்தை கல்வி நோக்கங்களிலிருந்து திசை திருப்பக்கூடும். உடல் நலனைப் பற்றி கவலை கொள்ள வேண்டியது இல்லை, அமைதியாக இருங்கள். இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் அளிப்பதும் முக்கியம்.

மகரம்: சிறப்பாகத்தான் செயல்படுகிறீர்கள், ஆனாலும் மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் சில விஷயங்களின் மீது ஒரு கண் வைத்திருப்பது நல்லது. வாரத்தின் தொடக்கத்தில், உங்கள் பணிகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிக்க வேண்டும் என நினைக்கும் போது, சில வேகத் தடைகளை சந்திக்க நேரிடும். உடல்நலப் பிரச்சினைகள் என எதுவாக இருந்தாலும் அதையும் சமாளிக்க வேண்டும். ஆரோக்கியத்தைத் தவிர, உங்கள் உறவுகள் மீது ஒரு கண் வைத்திருப்பது முக்கியம்.

ஏனெனில் வேலைப்பளு உங்கள் அன்புக்குரியவர்களிடமிருந்து உங்களை இழுக்கக்கூடும். வியாபாரிகள் இந்த வாரம் சில உயர்வு தாழ்வுகளைக் காணலாம். புதிதாக எதிலாவது பணத்தை முதலீடு செய்கிறீர்கள் என்றால், மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால் ஒரு சிறிய சறுக்கல் கூட பெரிய இழப்புக்கு வழிவகுக்கும்.

காதலில், உங்கள் காதல் துணை ஆரம்பத்தில் எங்கிருந்து வந்தார், இப்போது அவருடைய மனதில் என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். இல்லறம் நல்லறமாக செயல்பட, நீங்கள் உங்களையும் உங்கள் வாழ்க்கைத்துணையையும் எப்படி கவனித்து கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும்.

கும்பம்: கும்ப ராசி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நம்பிக்கை அளிக்கும். உங்கள் பிரச்சினைகள் மறையத் தொடங்குவதைக் காணப் போகிறீர்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் தள்ளிப்போட்ட பணிகளை முடிப்பீர்கள். உங்கள் தொழில் வாழ்க்கை மற்றும் வியாபாரம் ஆகியவற்றுக்கான புதிய பாதைகளைக் கண்டறிய குடும்பத்தினர் உதவுவார்கள். வாரத்தின் நடுப்பகுதியில், ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது. இந்த பயணம் புதிய நபர்களைச் சந்திக்கவும், சில சிறந்த நண்பர்களை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கலாம்.

வீட்டைச் சீர் செய்ய அல்லது அலங்கரிக்க சிறிதளவு பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இத்துடன் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நீங்கள், பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளையும் கண்டறியலாம். அதிர்ஷ்ட வசமாக பணமழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளது. வார இறுதியில் மிகவும் பிஸியாக இருக்கலாம். நீங்கள் முடிக்க வேண்டிய வேலைகள் வரிசை கட்டி நிற்பதையும் காணலாம், ஆகவே உங்களுடைய சில திட்டங்களை கட்டாயமாக ஒத்திவைக்க வேண்டி வரலாம்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்கள் திறமைகளை நன்றாக வெளிப்படுத்துவீர்கள். மேலும், உங்கள் வழியில் வரும் எந்தவொரு வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். வாரத்தின் தொடக்கத்தில், உங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவும் வேலை வாய்ப்புகள் அல்லது வியாபரங்களைப் பற்றிய சில சிறந்த செய்திகள் உங்கள் காதுகளில் வந்து விழும்.

உத்தியோகத்தில் மேலும் மேலும் முன்னேறும் போது, சக ஊழியர்களிடமிருந்தும் குடும்பத்தினரிடமிருந்தும் அதிக மரியாதையையும், பாராட்டையும் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு சில நல்ல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம். சந்தை நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் இன்பமான நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் ஒரு தெய்வீகமான அல்லது அதிர்ஷ்டமான நிகழ்வு ஏற்படலாம்.

திருமணம் ஆகாதவர் எனில், உங்கள் மனதுக்கு உகந்தவரை சந்திக்க நேரிடலாம். ஏற்கனவே திருமணமானவர் என்றால், உங்கள் குடும்பத்தில் ஒரு புதிய நபர் வருவதற்கான வாய்ப்புள்ளது. காதல் உறவுகளும் இந்த வாரம் செழிக்க வாய்ப்புள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.