மேஷம்: எதிர்காலத்தைப் பற்றிய முடிவுகளை எடுக்கும்போது, பொது அறிவுடன் சிந்தித்து அதைச் செயலாற்றுவது நன்மையைத் தரும். உங்கள் திட்டங்களைச் செயல்படுத்தவும், கணக்கீடுகளை உருவாக்கவும், ஜோதிட கணிப்பை அறிவுறுத்தலாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், உங்கள் பொது அறிவின் அடிப்படையிலேயே இறுதி முடிவை எடுங்கள்.
ரிஷபம்: வாதங்களாலும், விவாதங்களுமே இன்றைய தினம் நிறைந்திருக்கும். இன்று பிற்பகலில் வணிக விவாதங்களை நண்பர்களுடன் மேற்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இன்று மாலையில், உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களிடமிருந்து சிறப்பான கவனிப்பு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
மிதுனம்: இன்று மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாமல் கவனமாக இருக்கவேண்டும். உங்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களின் கருத்தைக் கவனமாகக் கேட்டு, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவ வேண்டும். இன்று மாலையில், மதம் சார்ந்தவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் உங்கள் நேரத்தைச் செலவிடுவீர்கள்.
கடகம்: இன்றைய தினம் ஒரு சவாலான மற்றும் சிக்கலான நாளாக இருக்கப் போவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றன. சில பிரச்சனைகளை தீர்க்க, சற்றே இலகுவாக இருப்பதும், பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்வதும் நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில், உங்களின் அன்பானவர்களிடம் அதிக நேரம் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
சிம்மம்: உங்கள் பங்குதாரர் அல்லது வாழ்க்கைத் துணையிடமிருந்து உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாது என்பதால் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் செய்பவர்களுக்கும், கமிஷன் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் இது கடினமான நாள் என்பதால், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். முக்கிய ஆவணங்களைக் கவனமாக ஆய்வு செய்த பிறகே கையெழுத்திடவும்.
கன்னி: இன்று உங்கள் திறமையை அதிகரிக்க, இலக்கை அதிகரிப்பீர்கள். ஏற்கனவே இருக்கும் தடைகளைத் தகர்க்க உயர் இலக்குகளை நீங்களே அமைக்க வேண்டும். பிற்பகலில் நிதி நிலைமை பற்றி அதிக கவலை எழும். சின்னஞ்சிறு விஷயங்கள் கூட உங்கள் உறுதியைக் குலைக்கும். இருந்தாலும் கூட, மாலை நேரத்தில் ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு, உங்கள் இலக்கை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல முயற்சிக்கலாம்.
துலாம்: அரசாங்கம் தொடர்பான வேலைகள் இன்று உங்களுக்கு நன்மையளிக்கும். உடன் பிறந்தவர்களுடன் உங்கள் உறவு நெருக்கமாகும், நெருங்கிய நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட முடியும்.
விருச்சிகம்: மூத்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்று முழு நேரத்தையும் செலவிட வேண்டியிருக்கும். உணர்ச்சிப்பூர்வமான நீங்கள் அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்கள் கொள்கைகளையும் விட்டுக் கொடுப்பீர்கள். வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று திருமணத்திற்காக வரன் வரலாம்.
தனுசு: இன்று எதுவும் முழுமையாக, ஆக்கப்பூர்வமாகச் செய்யமுடியாமல் போனாலும், அது நாளைக்கான உறுதியான முன்னேற்பாடாக இருக்கும். பகுதி நேர பயிற்சியில் சேர்ந்து, உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்குள் புதைந்திருக்கும், நீங்களே அறியாத திறமையை வெளிக்கொணரலாம். உங்கள் ஆசைகளை உயிர்ப்புடன் வைத்தால் அவற்றில் வெற்றி பெறலாம்.
மகரம்: இன்று உங்கள் மனதில் காதல் எண்ணங்கள் அதிகமாகத் தோன்றும். நினைவுகளைப் பின்னோக்கி அசைபோட்டு, நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் கழித்த சில பொன்னான நேரத்தை எண்ணி நெகிழ்ந்து போவீர்கள். உங்கள் பழைய நண்பர்களை அழைத்து, அந்த பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். தொழில்ரீதியாகப் பார்த்தால், முக்கியமான லட்சியங்களை அடைவீர்கள். ஒட்டுமொத்தமாகச் சொன்னால், இன்றைய நாள் உங்களுக்குப் பொன்னான நாள்.
கும்பம்: நீங்கள் வாங்கிய பொருட்கள் பற்றி நினைவில் வைத்திருக்காமல், ஆசைகளைப் பூர்த்தி செய்ய பயன்பட்ட கிரடிட் கார்டுகளை திட்டுவீர்கள். இருந்தாலும், இந்த அனுபவம், திட்டமிடுவது பற்றி உங்களைச் சிந்திக்கவும், ஒழுங்கமைக்கவும் தூண்டலாம். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.
மீனம்: இன்றைய தினம், உங்களுக்குத் தேவையற்ற கவலை இருக்காது. அதிக சகிப்புத்தன்மையும், தாராள மனதுடன் இருப்பீர்கள் என்பதால் பிறரை மன்னிப்பீர்கள். இது மிகவும் நல்லது, ஆனால் பிறர் தேவைக்கு அதிகமாக உங்களைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
இதையும் படிங்க: Weekly Rasipalan: காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!