மேஷம்: உங்களை நீங்களே பாராட்டி கொள்ளும் நாள் இன்று. அனைவரையும் ஈர்க்கும் வகையில் உங்கள் ஆடை தேர்வு இருக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். மற்றவர்கள் மத்தியில் உங்களுக்கென்ற தனி இடத்தை பிடிப்பீர்.
ரிஷபம்: உங்களது உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வர்த்தக ரீதியான சந்திப்புகள் வெற்றியில் முடியும். உங்களை நீங்களே வளர்த்துக் கொள்ளுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சிப் பணியில் இருப்பவராக இருந்தால் உங்களது ஆராய்ச்சியில் முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்: உங்களை எதிரியாக நினைபவர்களால் இன்று நீங்கள் வீழ்த்தப்பட வாய்ப்புள்ளது. வணிக ரீதியில் நிகழும் அனைத்து பரிவர்த்தனைகளையும் எச்சரிக்கையுடன் செய்யுங்கள். சிலர் உங்களுக்கு சாதகமாக இருப்பது போல் நடந்து கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
கடகம்: நீங்கள் மற்றவர்களிடம் வெளிப்படையாக நடந்துக்கொள்ளும் நாள் இன்று. மற்றவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வீர்கள். ஆனால் நாளின் பிற்பகுதியில் இந்த நிலை மாறி சிறிது கடுமையாக நடந்து கொள்ள நேரிடும். மாலையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
சிம்மம்: பாராட்டுதல்களைப் பெற தயாராக இருங்கள். நீண்ட நாட்களாக உங்கள் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இன்று உங்களை தேடி வரும். சக பணியாளர்கள் மற்றும் பணியில் மூத்தவர்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.
கன்னி: ஒருமனதோடு செயல்பட்டு வெற்றியை சுவைக்கும் நாள் இன்று. உங்களது நிர்வாகத்திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். உங்களுக்கு இயல்பாகவே முடிவெடுக்கும் திறன் மற்றும் ஆராய்ந்து பார்க்கும் திறன் அதிகம். அதனால் இன்று அனைவரிடம் இருந்தும் பாராட்டு பெறுவீர்.
துலாம்: உங்களது போட்டியாளர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படும் நாள் இன்று. அதனால் போட்டியாளர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். அவர்கள் உங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த புதிய காதல் உறவு கிடைக்கப்போகிறது.
விருச்சிகம்: உங்கள் கடுமையான உழைப்புக்கு ஏற்ப புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டால் வெற்றி நிச்சியம். வீட்டு வேலைகளில் ஈடுபட இன்று உகந்த நாளாக இருக்கும். தோட்டம், சமையல் மற்றும் சுத்தம் என மன விருப்பப்படி வீட்டு வேலைகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வேலை தொடர்பான கவலைகள் நீங்கும்.
தனுசு: உங்கள் அன்பிற்குரியவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடனும் இனிமையாக நினைவுகளை ஏற்படுத்தும் நாளாக இன்று இருக்கும்.
மகரம்: சுமுகமாக தொடரும் இந்நாளில் திடீரென பரபரப்பு ஏற்பட்டு பாதிப்புகளை விளைவிக்கும். உங்கள் சில கனவுகள் நிறைவேறலாம். அதற்காக எதிர்பார்ப்புகளை அதிகம் வைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் அலுவலகத்தில் பணியில் அதிகம் கவனம் செலுத்தினால் மட்டுமே குறிக்கோளை எட்ட முடியும்.
கும்பம்: உங்களது கனவு இல்லம் அல்லது வாகனம் வாங்க போகும் நாள் இன்று. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய சொத்துக்கள் வாங்க கூடும். அதனால் அது தொடர்பான விவரங்களை சேகரித்து, கடன் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவும்.
மீனம்: அனைத்து பணிகளையும் மிக விரைவாக புத்துணர்ச்சியுடன் செய்வீர்கள். மிக அதிர்ஷ்டமான நாள் இன்று. நீங்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த குடும்ப நிகழ்வுகள் இன்று நடைபெறுவதற்கான திட்டங்களை தீட்டும் நாளாக அமையும்.