மேஷம்: சமூகப் பொறுப்புகள் மற்றும் அலுவலக பணியின் காரணமாக உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும். இதிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு உங்களுக்கான நேரத்தை செலவழிக்க வேண்டும். உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உங்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டால், அனைத்து பணிகளும் பாதிக்கப்படும்.
ரிஷபம்: உங்கள் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. இந்த முன்னேற்றம் நீங்கள் எதிர்பார்த்த வகையில் இருக்காது. நிதி தொடர்பான வாய்ப்புகளும், வெற்றிகளும் உங்களை வந்து சேரும். பொருள் ஆதாயமும் இருக்கும்.
மிதுனம்: உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு உரையாடுவீர்கள். உங்களது நிதி நிலைமை குறித்து உங்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்க இது சரியான நேரமாகும். இதனால், உங்களது மனபாரம் குறையும். நீங்கள் புத்துணர்ச்சியுடன், அனைத்தையும் உற்சாகமாக அணுகுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் அதிர்ஷ்டம் வந்து சேரும்.
கடகம்: உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் பரிசு அளிப்பீர்கள். வர்த்தக கூட்டாளிகள் உடனான உறவு நல்ல நிலையில் உள்ளது. அவர்களிடம் இருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். உங்களது வாழ்க்கைத் துணைக்கான வருங்கால திட்டத்தை ஏற்படுத்த இது சரியான நேரமாகும்.
சிம்மம்: வானிலை மாற்றம் போல உங்கள் மனநிலை மாறிக் கொண்டே இருக்கும். சில சமயம் மகிழ்ச்சியாகவும் சில சமயங்களில் சோகமாகவும் இருக்கும். எனினும் அமைதியும், நிம்மதியும் ஏற்படும்.
கன்னி: உடல் நலன் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் கூடாது. முன்னர் ஏற்பட்ட காயங்கள் தற்போது உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், அமைதியும் வளமும் ஏற்படும்.
துலாம்: காதல் வயப்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு, நீங்கள் சந்திக்கும் காதலரை வரவேற்கத் தயாராக இருங்கள். எனினும், இந்த காதலுக்காக நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
விருச்சிகம்: மனதிலிருந்து எதிர்மறையான எண்ணங்களை நீக்கவும். நீங்கள் உங்கள் குழு உறுப்பினர்களுடன் திறமையாக பணியாற்றி, அவர்களுக்கு பணிகளை சிறந்த முறையில் பங்கீட்டு வழங்குவீர்கள். அவர்களது திறன்களை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற வகையில் பணிகளை ஒதுக்குவீர்கள்.
தனுசு: இன்று நீங்கள் மந்தமாக உணர்வீர்கள். எனினும், மாலையில் கவலை மேகங்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். வெளிநாடு அல்லது நண்பர்களிடம் இருந்து வரும் நல்ல செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
மகரம்: அறிவார்ந்த வளர்ச்சி ஒப்பற்றதாக இருக்கும். உங்கள் நோக்கமும் சரியாகவே இருக்கும். உங்கள் உறுதிப்பாடு காரணமாக, முடிவுகளை திறமையாக எடுப்பீர்கள்.
கும்பம்: உங்கள் தொடர்பு திறன் அதிசயங்களை உண்டாக்கும். உங்களுடைய பேச்சாற்றல் மூலம் மக்களைக் கவர்வீர்கள். கூட்டங்களில் பங்கேற்கும் போது, இந்த திறன் மிகவும் பயன் மிக்கதாக இருக்கலாம். ஆனால், மக்கள் உங்களுடன் ஒத்துப் போகாமல் இருக்கும் போது, அவர்களை நிர்பந்திக்காமல் இருப்பது தான் உங்கள் நல்லது.
மீனம்: ஆன்மீக புத்தகங்களைப் படித்ததன் மூலம் உங்களுக்கு ஆன்மீக விஷயங்களில் மிகுந்த ஆர்வம் இருக்கும். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள்.