மேஷம்: நீங்கள் மிகச் சரியாக திட்டமிட்டு வெற்றிகரமாக அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவீர்கள். எனினும், முன்னேற்றம் சிறிது மந்த கதியிலேயே இருக்கும். மனம் தளர வேண்டாம். உங்களுக்கு கடவுளின் ஆசி எப்போதும் உண்டு.
ரிஷபம்: நீங்கள் உங்களது நண்பர்களுடன், உங்களது சாதனையை எடுத்துரைக்கும் வகையிலான வெற்றி விழாவைக் கொண்டாடுவீர்கள். வர்த்தகத்திலும், அலுவலகத்திலும் உங்களது முற்போக்கான சிந்தனையின் மூலம், வளமான எதிர்காலத்திற்கான அஸ்திவாரத்தை ஏற்படுத்துவீர்கள். சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குதூகலமாக இருப்பீர்கள்.
மிதுனம்: நீங்கள் மற்றவர்களின் திறமையைப் பாராட்டி ஊக்குவிப்பதில் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பாதுகாப்பு மற்றும் நிதி நிலைமை தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். அன்பினால் இணைக்கப்பட்ட உறவுகள் நீண்ட காலத்திற்கு வலுவானதாக இருக்கும்.
கடகம்: நெருக்கமான நண்பர்கள், உங்கள் மனப்பான்மையைக் கண்டு பெருமை கொள்வார்கள். அவர்களுடன் நேரத்தைக் கழித்து, அவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். நண்பர்களுடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் நீண்ட காலத்திற்கு, நீடித்து இருக்கும்.
சிம்மம்: இன்றைய தினம், சாதக மற்றும் பாதக பலன்களைக் கொண்டது ஆகும். ஒருபுறம் உங்களது வர்த்தகக் கூட்டாளி அல்லது வாழ்க்கைத் துணை தொடர்பாக உங்களுக்கு அதிருப்தி இருக்கும். மற்றொருபுறம், உங்களது முயற்சிக்கு, எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைத்திருக்கும். நண்பரின் அறிவுரையின் காரணமாக நீங்கள் இரு விஷயங்களையும் ஏற்றுக் கொள்வீர்கள்.
கன்னி: உங்களது உடல்நல பாதிப்பு காரணமாக, நீங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்துவீர்கள். உங்களது பழக்கவழக்கத்தை மாற்றி, ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, உடற்பயிற்சி செய்யவும்.
துலாம்: எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, மன வருத்தம் தரக்கூடிய சில விசயங்கள் நடக்கும். ஆனால், நீங்கள் மன உறுதியுடன் இருப்பீர்கள். அதற்கான முக்கிய காரணம், உங்கள் காதல் துணையின் ஆறுதலான வார்த்தைகள் ஆகும்.
விருச்சிகம்: புதிய வர்த்தக முயற்சியை மேற்கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உங்கள் செயல்திறன் முழுவதையும் பயன்படுத்தி, எல்லாவிதத்திலும் வெற்றி அடைவீர்கள். பொதுவாக இன்று, வெகுமதிகள் மற்றும் பாராட்டுக்களுடன், உற்சாகம் நிறைந்த சிறப்பான நாளாக இருக்கும். பணியில் மூத்தவர்கள் மற்றும் மேலதிகாரிகள் உங்களைப் பற்றிய நல்ல எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள்.
தனுசு: உங்களுக்கு கோபம் உணர்வு அதிகம் இருக்கும். கோபம் உலகையே அழித்துவிடும் என்பதை மறக்க வேண்டாம். இந்த கோபத்தினால் பாதிக்கப்படுவது நீங்கள்தான். அதனால் பொறுமையாக, அவசரப்படாமல் சிந்தித்து செயல்படவும். நிதி நெருக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது. கவனமாக கையாளவும்.
மகரம்: உங்களது குறிக்கோளை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அறிவார்ந்த வளர்ச்சி ஒப்பற்றதாக இருக்கும். உங்கள் நோக்கமும் சரியாகவே இருக்கும். உங்கள் உறுதிப்பாடு காரணமாக, முடிவுகளை திறமையாக எடுப்பீர்கள்.
கும்பம்: வெற்றி, பணம் மற்றும் காதல் உறவு ஆகிய ஏதேனும் ஒன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு கிடைக்கும். மாலையில் நீங்கள் ஆராய்ச்சி பணியில் ஈடுபடக்கூடும் அல்லது அது தொடர்பான ஆலோசனை அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்.
மீனம்: அலுவலகம் மற்றும் வீடு ஆகிய இரண்டிலும், நீங்கள் பொறுப்புகளையும், பணிகளையும் கையாள்வீர்கள். வீட்டை அலங்கரிக்கும் பணியில் முழுமனதுடன் ஈடுபடுவீர்கள். செலவுகள் சிறிது அதிகரிக்கலாம். கடுமையான உங்களது முயற்சிக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்.