மேஷம்: உங்களது குடும்பத்தினர் மற்றும் உங்கள் மனதிற்குப் பிடித்தவர்கள் மூலமாக உங்களுக்கு சந்தோஷமும், வளமும் கிடைக்கும். உங்கள் காதல் துணையுடன், குதூகலமாக நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவர் என்றால், எவரேனும் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்க்கக் கூடும்.
ரிஷபம்: ஒரு பொன்னான வாய்ப்புகளைக் கொண்டு வரும் நாளாக இருக்கும். உடல் நலமும், பொருள் ஆதாயமும் உங்களுக்கு கிடைக்கும். நகை பரிமாற்றம் காரணமாக உறவுகள் புதுப்பிக்கப்படலாம். ஆனால், நீங்கள் ஏமாற்றப்படும் சாத்தியம் இருப்பதால் கவனமாக செயல்படவும்.
மிதுனம்: உங்களது குடும்பம் மீது உள்ள உங்கள் அன்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நீங்கள், உங்கள் மனதிற்கு பிடித்தவர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் செயல்படும் நபர் அல்ல. பணி தொடர்பான பயணம் அல்லது உல்லாச பயணம் மேற்கொள்ளும் எண்ணம் உங்களுக்கு இருக்கும். அமைதியாக நேரத்தை செலவழிக்க நீங்கள் விரும்புவீர்கள். உங்களைப் போன்ற மனநிலையைக் கொண்டவர்களுடன் நீங்கள் இன்று மாலை நேரத்தை கழிக்கும் சாத்தியம் உள்ளது.
கடகம்: மனதிற்கு பிடித்தவர்கள் தொடர்பாக நீங்கள் அக்கறையுடன் செயல்படுவீர்கள். அதனால், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக்கொண்டு, அவர்கள் உணர்ச்சிக்கு நீங்கள் மதிப்பு கொடுப்பீர்கள். நகரத்தை விட்டு சிறிய பயணம் மேற்கொள்ள நீங்கள் விரும்பலாம். நீங்கள் மனதிற்குப் பிடித்தவாறு செயல்பட்டு, நேரத்தை சந்தோஷமாக கழிப்பீர்கள்.
சிம்மம்: இன்றைய நாளின் இறுதியில், உங்களது வாழ்க்கைத் துணைக்காக நீங்கள் விலை மதிப்புமிக்க நகைகளை வாங்க பணம் செலவழிக்ககூடும். ஆனால் அதே நேரத்தில், செலவுகளை யோசித்து மேற்கொள்ளவும். பண விஷயங்களைப் பொறுத்தவரை, கவனத்துடன் செயல்படுவது நல்லது.
கன்னி: உங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மனதைக் கவர விலை மதிப்பு மிக்க பரிசுகளை நீங்கள் வாங்கக் கூடும். நீங்கள் நெடுநாட்களாக, காதல் உறவு மேற்கொள்ள விரும்பும் ஒரு நபரை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்: உங்களது பணியில் சில தடைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், அது குறித்து வருத்தப்படாமல் அதனைத் தீர்க்கும் வழிகளை ஆராயவும். பண விஷயத்தைப் பொருத்தவரை, உங்கள் வாழ்க்கையில் நிதி ஆதாயம் இருக்கும். உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையிலான நிகழ்வு ஒன்று இன்று ஏற்படலாம். இன்று உங்களது அனைத்து ஆசைகளும் நிறைவேறும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்: துள்ளல் மற்றும் குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நாள் முழுவதும் உங்களுக்கு வேலையும் அதிகம் இருக்கும். முடிக்கப்படாத பணிகள் மற்றும் வர்த்தக கூட்டங்கள் குறித்து நீங்கள் நாள் முழுவதும் சிந்திப்பீர்கள். இன்றைய நாளின் முடிவில், நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வடிவம் பெற்று, பலன்கள் கொடுக்கத் தொடங்கும்.
தனுசு: நீங்கள் இன்றைய நாளில் ஏற்படுத்தும் உறவு, வாழ்நாள் முழுவதும் தொடரும். மனதிற்குப் பிடித்தவர்கள் உடன் நீங்கள் நல்ல முறையில் நேரம் செலவிடுவீர்கள். மனதில் நன்றியுணர்வு நிறைந்திருக்கும். உங்கள் அன்பு, ஒரு சாதாரணமான விஷயமல்ல, அதற்கு மேலான ஒன்று என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
மகரம்: உங்களது பணி மற்றும் பொறுப்புகளின் காரணமாக, உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும். ஆனால், நீங்கள் தொழில் வல்லுநர் என்பதால், அதனை எளிதாக நிறைவேற்றுவீர்கள். இன்றைய தினத்தில், உங்களது போட்டியாளர்களும் உங்களது திறமையை அறிந்து கொண்டு, உங்கள் பாதையில் இருந்து விலகிச்செல்வார்கள்.
கும்பம்: பணியிடத்தில் உங்களுக்கு ஒரு முக்கியமான நாளாக இருக்கும் என்பதால், அதனை எதிர்கொள்ள தயாரான மனநிலையில் இருக்கவும். ஆகவே, முடிவெடுக்கும்போது சிறந்த முறையில் செயல்படுவது மிகவும் முக்கியமாகும். அவசர முடிவுகள், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கவனமாக செயல்படவும்.
மீனம்: புதிய நபர்கள் சந்திப்பு அல்லது முக்கியமான ஒருவருடனான சந்திப்பு மூலம், உங்கள் சமூகத் தொடர்பு விரிவடையும் வாய்ப்புள்ளது. புத்துணர்வை ஏற்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சிறந்த பலனளிக்காமல் போகும் வாய்ப்புள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய முடிவுகள் அல்லது பணியில் புதிய திட்டங்களை செயல்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.