மேஷம்: மலரும் நினைவுகள், உங்கள் மனதை ஆக்கிரமிக்கும். இது உங்கள் பணியில் எதிரொலிக்கும். இதனால் மற்றவர்கள், உங்களது கனிவான தன்மை மற்றும் இளகிய மனத்தை அறிந்து கொள்வார்கள். நீங்கள் பணத்தை எச்சரிக்கையுடன் செலவழித்து, அதனை சேமிப்பீர்கள்.
ரிஷபம்: உங்கள் செயல்களில் கோபம் வெளிப்படும். நீங்கள் சொல்வதையே அனைவரும் கேட்க வேண்டுமென்று விரும்புவீர்கள். உங்கள் உறுதியான நிலைப்பாட்டை கட்டுப்படுத்துவது நல்லது. புதிய பணிகள் மற்றும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இது சாதகமான நாள் அல்ல. அதனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மென்மையாகப் பேசவும்.
மிதுனம்: உங்களது கோபமான மன நிலையின் காரணமாக, மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். விரோதம் காரணமாக, உங்களது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள். எனினும், நீங்கள் அவர்களை வென்று விடுவீர்கள். உங்களது அறிவுத் திறன் காரணமாக அவர்கள் உங்களுடன் மோதுவதை நிறுத்திவிடுவார்கள்.
கடகம்: நீங்கள் புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அவர்களுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆனால், உங்கள் மனதில் கவலை அல்லது பதற்றம் இருக்கும். எனினும், நீங்கள் நண்பர்களுடன் உங்கள் பொழுதைக் கழித்து, கவலையில் இருந்து விடுபடுவீர்கள்.
சிம்மம்: உங்கள் வாழ்க்கையில் இத்தனை நாட்களாக சந்திக்கக் காத்திருந்த ஒரு நபரை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கக் கூடும். உங்கள் காதல் துணைக்கு, நீங்கள் பெரிய பரிசு ஒன்றையும் அளிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு கலையில் ஆர்வம் இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி, மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கன்னி: செலவுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கக்கூடும். அதிக பண விரயம் ஏற்படலாம். எனினும், அனைத்து விஷயங்கள் சாதகமாக நடக்கும் வாய்ப்புள்ளது. அதனை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் தொழில் ரீதியாக மேம்படுவீர்கள்.
துலாம்: அதிக வேலை காரணமாக, நீங்கள் நெடுநாட்களாக, உங்கள் காதல் துணையுடன் ஒன்றாக நேரத்தை கழிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கும். ஆனால், இன்றைய நாளை உங்கள் காதல் துணையுடன் இனிமையாக கழிப்பதோடு, புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள். இன்றைய தினத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும்.
விருச்சிகம்: நீங்கள் கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும். வேறு ஒருவரை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையினால், எதிர்பாராதவிதமாக நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இன்னும் நீங்கள் கவனமாக செயல்பட்டால், தர்மசங்கடத்தில் இருந்து தப்பிக்கலாம். பழைய அனுபவங்கள் மூலம் நீங்கள் இதனைக் கற்றுக் கொள்ளலாம்.
தனுசு: ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு தொடக்க நிகழ்ச்சியில் நீங்கள் முக்கியமானவராக கலந்து கொள்ளவும், பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. நெடுந்தூர வர்த்தக பயணம் மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்கவும்.
மகரம்: கடந்த சில மாதங்கள் உங்களுக்கு மிகவும் கடினமானதாக இருந்தன. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான சந்தோஷத்தை இழந்திருப்பீர்கள். உங்கள் அர்ப்பணிப்பும், உழைப்பும் நீங்கள் அடைய விரும்பிய உயரத்துக்கு உங்களை இட்டுச்செல்லும். மிக ஒய்யாரமாக அமர்ந்து பலன்களை அறுவடை செய்து அனுபவிக்க வேண்டிய நேரம் இது.
கும்பம்: இன்றைய தினம், மிக சிக்கலான பிரச்னைகளுக்கும் எளிதாக தீர்வு காணும் வகையில் இருக்கும். சிலர் தங்கள் சுமைகளையும், பொறுப்புகளையும் உங்கள் மீது இறக்கிவைக்கலாம். உங்கள் பலவீனங்களை வலுவாக்கக்கூடிய மிகவும் பொன்னான தருணம் இது. எனவே மிகவும் கவனமாக இருக்கவும்.
மீனம்: உங்களுக்கு இன்று சாதகமான சூழ்நிலை இல்லை. எனவே, நிதி தொடர்பான ஒப்பந்தங்களில் மிக விழிப்புடன் இருக்க வேண்டும். நிதி தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.