ETV Bharat / spiritual

புத்தாண்டு பலன் 2025: ரிஷப ராசியின் இந்த ஆண்டுக்கான பலன் என்ன? - 2025 RASIPALAN FOR TAURUS

Taurus New Year Rasipalan: 2025ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களின் பலன்களைப் பார்க்கலாம்.

ரிஷபம் ராசி - கோப்புப்படம்
ரிஷபம் ராசி - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2025, 12:04 AM IST

ரிஷப ராசி நேயர்களே! 2025 ஆம் ஆண்டின் ஆரம்பம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும். உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. இது மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த ஆண்டாக இருக்க கூடும். உங்கள் திட்டங்கள் பலனளிக்கும் வகையில் அமைந்துள்ளன, மேலும் நீங்கள் தொழில் முறை சாதனைகளில் வெற்றி பெறத் தயாராக உள்ளீர்கள். உங்கள் தன்னம்பிக்கை நன்கு சீராக உயரும், உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதால்.

அது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும். நீங்கள் மிகச் சிறப்பாக முடிவெடுக்கும் திறன் கொண்டிருப்பதால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்முறை வாழ்க்கை ஆகிய இரண்டையும் மிகவும் சுலபமாக எந்த வித சிக்கலும் இன்றி எளிதாக கையாளுவீர்கள் மற்றும் இரண்டையும் சரிசமமாக பராமரிப்பீர்கள். இருப்பினும், குடும்பத்தில் உங்கள் சகோதரர்களுடன் முரண்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் தைரியத்தை, துடுக்குத்தனமாக மாற விடாமல் காப்பது முக்கியம்.

தவறான புரிதல்கள் மற்றும் தேவையற்ற சிக்கல்கள் என காதல் உறவுகள், இந்த ஆண்டு சில சங்கடங்களை எதிர் நோக்கக்கூடும், அது உங்கள் ரிலேஷன்ஷிப்பில் துன்பங்களை ஏற்படுத்தலாம். இந்த தடைகள் இருந்தபோதிலும், இந்த ஆண்டு உங்கள் உறவு ஆழமாவதையும் நீங்கள் காணலாம். உங்கள் முதலீடுகளிலிருந்து குறிப்பிடத்தக்க நிதி வருமானத்திற்கான சாத்தியக்கூறுகளுடன், ஆண்டின் தொடக்கத்தில் வணிக நடவடிக்கைகள் செழித்து வளரும்.

இருப்பினும், நீங்கள் துணிகரமாக எடுக்கும் எடுக்கும் நடவடிக்கைககள் சில ஆபத்தான சவால்களை ஏற்படுத்தக்கூடும். ஆகவே எச்சரிக்கை தேவை. உங்கள் வருமானம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உங்கள் திட்டங்களை திறம்பட முன்னெடுக்க அனுமதிக்கிறது. பணியிடத்தில் பொறுப்புகளும் பணிச்சுமையும் அதிகமாக இருந்த போதிலும், பலன்கள் ஆண்டின் நடுப்பகுதியில் தெளிவாகத் தெரியும் வேலை செய்யும் நேரம் அதிகமாக நீட்டிக்கப்படலாம்.

ஆனால், அவை பயனுள்ளவையாக இருக்கும். மாணவர்களுக்கு, இந்த ஆண்டு கல்விக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மனதை ஒருமுகப்படுத்தி கற்பது தான் ஆழ்ந்து படிப்பதற்கான முக்கியன அம்சம். கவனத்தை சிதற விடுவது சிரமங்களுக்கு வழிவகுக்கும். ஆண்டின் இரண்டாம் பாதி, செல்வத்தை சேமிக்கவும் மற்றும் செலவைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் முக்கிய பங்காற்றும். உங்கள் நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வளமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.

ஆரோக்கிய ரீதியாக, இந்த ஆண்டு உங்களுக்கு முதுகுவலி அதிகமாக இருக்கலாம். உங்கள் உடற் தகுதியை பராமரிப்பது மற்றும் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்வது முக்கியம். ஓடுதல் மற்றும் ஜிம்மிற்குச் செல்வது போன்ற புதிய விதிமுறைகளை பின்பற்றுவது உதவியாக இருக்கும். நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால், இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் அங்கீகாரத்தை தரும் காலமாக இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.