ETV Bharat / opinion

விஜயின் அரசியல் வருகை.. அரசியல் தலைவர்களின் கருத்து என்ன?

TVK Vijay: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என கட்சி தொடங்கியுள்ள நிலையில், இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அவர்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

politicians reaction on vijay tvk political party

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 7:00 PM IST

சென்னை: நடிகர் விஜய், தமது அரசியல் கட்சியின் பெயரை இன்று (பிப்.2) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவர்களது வாழ்த்துக்களையும், வரவேற்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அரசியல் என்பது பெருங்கடல். அதில் மூழ்கிப் போனவர்களும் உண்டு. நீந்தி கரை சேர்ந்தவர்களும் உண்டு. விஜய் என்னவாகப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அவர்கள் அதை முடிவு செய்வார்கள். ஊழல் சீர்கேடுகள் நிறைந்த, மதவாதம் என விஜய் தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளது திமுக மற்றும் பாஜகவுக்குதான் பொருந்தும். அதிமுக சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுகவின் ஓட்டுகளை யாரும் பிரிக்க முடியாது. நான் நடிகர் விஜயை சிறுமைப்படுத்த விரும்பவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இனிமேல் எம்ஜிஆர் போல ஒருவர் பிறக்க முடியாது.

திமுக என்பது ஒரு தீய சக்தி. அந்த திமுக, தமிழகத்தை கபளீகரம் செய்துவிட்டது. தமிழகத்தை தீய சக்தியிடம் இருந்து மீட்க ஒரு கட்சி தேவை. அது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான். இயக்கம் தொடங்கி 50 ஆண்டுகளைக் கடந்தும், தற்போதும் ஓர் எழுச்சியுடன் இருக்கிறது. அவர் போட்ட விதைதான் இன்று ஆலமரமாக பல்வேறு நபர்களுக்கு நிழல் கொடுத்திருக்கிறது. எங்களுடைய இயக்கத்தை மற்ற எந்த இயக்கத்துடனும் ஒப்பிட முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், அதிமுக நிலைத்து நிற்கும்" என்றார்.

திருமாவளவன்: "நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைப் பற்றி கருத்து கூறும்போது, நாங்கள் முன்னதாகவே வரவேற்றிருக்கிறோம். ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்றுவதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். அதுவே ஜனநாயகம்.

அந்த வகையில், நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். அவரது ரசிகர் மன்றத்தைச் சார்ந்த ரசிகர்களுக்கு, அவர் நம்பகத்தன்மையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அவரின் தொலைநோக்கு முற்போக்கு பார்வையை நான் வரவேற்க கடமைபட்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின்: "இந்திய ஜனநாயகத்தில் அரசியல் இயக்கத்தை யார் வேண்டுமானாலும் துவங்கலாம். அதற்கான உரிமை உள்ளது. அந்த வகையில், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். நடிகர் விஜயின் இந்த முடிவுக்கு பாராட்டுக்கள். அவரது மக்கள் பணி சிறக்கட்டும்" என வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை: "தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகவும் மக்களுக்காகப் பணியாற்ற தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜயை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

யார் அரசியலுக்கு வந்தாலும் நான் வரவேற்கிறேன். மக்களை மேம்படுத்துவதற்கு யார் வேண்டுமென்றாலும் வாருங்கள். மக்களுக்கு ஒரு தெளிவான சித்தாந்தத்தை கொடுங்கள், அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். 'Democracy is all about choice' 3 கட்சிகள் இருக்க வேண்டிய இடத்தில், 6 கட்சிகள் இருப்பது மக்களுக்கு கூடுதல் பலன்தான். புதியவர்கள் வரும் போது பல மாற்றங்கள் நிகழும். அதனால் நடிகர் விஜய் மக்களுக்காக சேவைகள் செய்யட்டும். இறுதியில் தமிழக மக்கள் தேர்ந்தெடுக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் களமிறங்கிய விஜய்.. கொள்கை, திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.