ETV Bharat / opinion

டீப் பேக் தொழில்நுட்பத்தால் தனிநபர் தனியுரிமை எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? தொழில்நுட்பத்தால் ஜனநாயகத்தில் ஏற்படும் தாக்கங்கள் என்ன? - Deepfake Analysis - DEEPFAKE ANALYSIS

அண்மைக் காலமாக டீப் பேக் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி டிஜிட்டல் மீது நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கி வரும் நிலையில், டீப் பேக் தொழில்நுட்பத்தை முறையாக வழிநடத்துவதன் மூலம் பேண வேண்டிய ஜனநாயக மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தொழில்நுட்ப ஆய்வாளர் கெளரி சங்கர் மமிதி விவரிக்கிறார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 1:33 PM IST

ஐதராபாத் : டீப் பேக் தொழில்நுட்பம், மேம்படுத்தப்பட்ட மெஷின் லேர்னிங் மற்றும் பேஷியல் ரெகக்னிஷன் அல்காரிதம்களை மேம்படுத்துகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ரெடிட் பயனர் ஒருவரால் அறிமுகமான இந்த தொழில்நுட்பம் பல்வேறு காலக்கட்டங்களுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்து உள்ளது.

இந்த கண்டுபிடிப்பு உலகளவில் தகவல் ஒருமைப்பாடு, தனிநபர் தனியுரிமை மற்றும் ஜனநாயக செயல்முறைகளுக்கு சவாலாக உள்ளது மட்டுமின்றி போலி வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை உருவாக்கவும் உதவுகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

தவறாக பயன்படுத்தப்படும் டீப் பேக் தொழில்நுட்பத்தால் ஜனநாயகத்தில் ஏற்படும் தாக்கங்கள் :

டீப் பேக் தொழில்நுட்பம் டீப் பேசஸ் மற்றும் டீப் வாய்சஸ் ஆகிய இரண்டு வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் டீப் பேசஸ் என்பது குறிப்பிட்ட வீடியோவில் ஒருவரது முகத்தை செயற்கையாக உட்புகுத்துவதாகும். அதேபோல் டீப் வாய்சஸ் என்பது குறிப்பிட்ட ஆடியோவை குறிப்பிடத்தக்க நபர் பேசியது போன்று மிமிக்கிறி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இந்த மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மீடியா சார்ந்த புதுப் புது உள்ளடக்கங்கள், உள்ளிட்டவைகளை உருவாக்க உதவுகிறது. டெய்லர் ஸ்விப்ட், செலினா கோம்ஸ், எலான் மஸ்க் மற்றும் ஜோ ரோகன் போன்ற பிரபலங்களை உள்ளடக்கிய தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை அவர்களின் நேரடி பங்கேற்பு இல்லாமலேயே இந்த தொழில்நுட்பம் குறிப்பாக மார்க்கெட்டிங் டொமைனில் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறை பல ஆண்டுகளாக இது போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7 பாகத்தில் பிரையன் மற்றும் ரோக் ஒன் படத்தில் லியா போன்ற இறந்த நடிகர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவுகின்றன.

இருப்பினும், டீப் பேக் தொழில்நுட்பம் ஏற்கனவே உள்ள முகங்களை அச்சு அசலாக நகல் எடுக்க பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், முற்றிலும் கற்பனையான கதாபாத்திரங்களை உருவாக்கும் திறனையும் கொண்டு உள்ளது. மேலும் உண்மைச் சம்பவங்களுக்கு மாறாக கற்பனைகளை கொண்டு போலி பிரசாரங்களும் இந்த டீப் பேக் தொழில்நுட்பத்தில் பயன்படுத்த கூடும் என்றால் அது மிகையாகாது.

ரஷ்யாவிற்கு ஆதரவான சமூக ஊடக கணக்குகளில் உக்ரைன் வீரர்கள் குறித்த வீடியோக்கள் பரவியது முதல், ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், கஜோல் மற்றும் ஆலியா பட் போன்ற இந்திய நடிகைகளின் வைரலான டீப் பேக் வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு மோசமான சூழலை உருவாக்கக் கூடும் என்பது உணர்த்துகிறது.

அதேபோல் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் போரை கைவிட்டு சரணடைவது தொடர்பான டீப் பேக் வீடியோ வெளியாகி மோசமான சூழலை உருவாக்க துணை போனது என்றால் நிதர்சனமான உண்மை. டீப் பேக் தொழில்நுட்பம் படைப்பாற்றல் மற்றும் சந்தைப்படுத்துதலில் இணையற்ற வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில் குறிப்பிடத்தக்க நெறிமுறை சவால்களையும் முன்வைக்கிறது.

மார்க்கெட்டிங் துறையில் டீப் பேக் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு என்பது அளப்பறியதாக இருந்தாலும் சில நேரங்களில் சமுதாய சிக்கல்களை தூண்டும் வகையில் அமையக் கூடிய நிலையில் உள்ளது. அதனை சீரமைக்கு சூழ்நிலைக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குதன் மூலம் உள்ளடக்க நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை முறையாக கையாள முடியும்.

செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்குப் பதிலாக மேம்படுத்த உதவுகின்றன. Mondelez, ITC மற்றும் Zomato போன்ற நுகர்வோர் பிராண்டுகளின் டீப் பேக் தொழில்நுட்பத்தின் புதுமையான பயன்பாடு விளம்பர உத்திகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

பார்வையாளர்கள் ஷாருக் கான், ஹிருத்திக் ரோஷன் மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்ற முக்கிய பிரபலங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த தொழில்நுட்பம் அளப்பறிய பணிகளில் ஈடுபடுகிறது. அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் அதன் மூலம் விரும்பத்தகாத விளம்பரங்களை பிரபலங்கள் ஊக்குவிக்கும் நிலையை உருவாக்குகின்றன.

டீப் பேக் தொழில்நுட்பம் குறித்து குறிப்பிடத்தக்க வகையில் கூறுகையில் அண்மையில் ஐடிசி நிறுவனத்தின் சன்பீஸ்ட் டார்க் பேன்டஸி பிஸ்கட் விளம்பரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டை அது தொடர்பான தொழில்நுட்பத்தை தனது இணையதளத்தில் வெளியிட்ட நிறுவனம், யாரும் தங்களது புகைப்படத்தை அதில் பதிவிட்டு விளம்பரத்தில் ஷாருக்கானுடன் தோன்றுவது போல் மாற்றக் கூடிய வகையில் விளம்பரப்படுத்தியது. இந்த விளம்பரம் வைரலானது.

அதேபோல் சோமேட்டோ நிறுவனமும் இதே பாணியை கடைபிடித்து ஹிருத்திக் ரோஷனை கொண்டு டீப் பேக் தொழில்நுட்பத்தில் விளம்பரம் வெளியிட்டது.

அரசின் எதிர்பார்ப்பும் பொது மக்களின் உணர்வுகளும் :

760 மில்லியன் இணைய பயனர்களைக் கொண்ட இந்தியாவில், போலி வீடியோக்களுக்கு எதிரான குறிப்பிடத்தக்க பொதுக் கூச்சல் அரசின் கவனத்தை நடவடிக்கை எடுக்க தூண்டி உள்ளது. மத்திய தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டீப் பேக் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேவையான விதிமுறைகள் குறித்து அறிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆலோசனையின் கீழ், தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் படி தவறான தகவல்களைக் கண்டறிந்து தணிக்கை செய்ய சமூக ஊடக இடைத்தரகர்களின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

தொழில்நுட்ப முன்னேற்றங்களால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள்:

டீப் பேக் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்பது ஜெனரேட்டிவ் அட்வர்ஸரியல் நெட்வொர்க்குகள் மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றால் எளிதாக்கப்பட்டது, நம்பத்தகுந்த டீப் பேக்குகளை உருவாக்குவதை ஊக்குவிக்கிறது. மேலும் அவற்றை இணையதளங்களில் பரவுவதை எளிதாக செயல்படுத்துகிறது.

சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள்:

செயற்கை நுண்ணறிவால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சீனா, ஜெர்மனி, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உட்பட 29 நாடுகள், டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2023 மூலம் டீப் பேக் வீடியோக்களால் ஏற்படும் பிரச்சினைகளை தணிக்கை செய்ய ஒத்துழைப்பதாக உறுதியளித்துள்ளன.

மேலும், முக்கியமான தனிப்பட்ட தரவை பாதுகாப்பதிலும் தனி நபர்களின் தனியுரிமையை உறுதி செய்வதிலும் சமூக ஊடக தளங்களில் பொறுப்புக்கூறலின் அவசியத்தை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. தென் கொரியாவில் உள்ள Sungkyunkwan பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மாறுபட்ட உண்மையான டீப் பேக்குகளின் தரவுத் தொகுப்பை ஆய்வு செய்தனர்.

ஆங்கிலம், ரஷ்யன், மாண்டரின் மற்றும் கொரிய மொழிகளில் 21 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் டீப் பேக் வீடியோக்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர். மேலும் டீப் பேக்குகள் யூடியூப், டிக் டாக், ரெடிட் மற்றும் சீன வீடியோ பகிர்வு தளமான பிலிபிலி ஆகியவற்றில் இருந்து பெரும்பாலும் பெறப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்.

டீப் பேக் தொழில்நுட்பத்தால் வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் :

டிப்யூஷன் மாடல் டீப் பேக்குகள் மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ ஆகியவற்றின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சி ஆகியவற்றால் பல்வேறு சவால்கள் ஏற்படுகின்றன. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் டீப் பேக்குகளைக் கண்டறிந்து எளிதில் புரிந்து கொள்ள உதவும் கருவிகள் மற்றும் கல்வி ஆதாரங்களை உருவாக்கி உள்ளன. இதன் மூலம் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதில் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கை வலியுறுத்துகின்றன.

வளமையான எதிர்காலத்தை நோக்கி டிஜிட்டல் நிலப்பரப்பு தொடர்ந்து உருவாகி வருவதால், ஜனநாயக ஒருமைப்பாடு மற்றும் தனிநபர் தனியுரிமையை பாதுகாக்க சட்ட, தொழில்நுட்ப மற்றும் கல்வி முயற்சிகளை ஒருங்கிணைத்து பன்முக அணுகுமுறைக்கு டீப் பேக்குகளின் உதவி என்பது தேவைப்படுகிறது.

அதேநேரம் டீப் பேக்கு தொழில்நுட்பத்தின் அதிநவீனத்தால், டிஜிட்டல் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையை பேணுவதும், ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பின் அடிப்படை கொள்கைகளைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானது.

இதையும் படிங்க : இந்தியா - EFTA வர்த்தக ஒப்பந்தத்தால் என்ன பயன்? உலகின் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறுமா? நிபுணர் கூறுவது என்ன? - India Sign Trade Deal With EFTA

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.