ETV Bharat / opinion

சினிமா மாதிரி அரசியல் இருக்காது.. விஜயின் அரசியல் வருகைக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் கருத்து! - KMDK ER Eswaran

KMDK ER Eswaran: தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், இதில் சினிமா நடிகர் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை, தமிழக அரசியலில் பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்து உள்ளார்கள் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 1:32 PM IST

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில், நாளை (பிப்.4) கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மாநாடு நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பார்வையிட்டார்.

இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஈ.ஆர்.ஈஸ்வரன், “திமுக உடனான கூட்டணி குறித்து வரும் வதந்திகளுக்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. கூட்டணி குறித்து திமுகவுடன் பேசிய பிறகு, எத்தனை தொகுதிகள் என்பது தெரிவிக்கப்படும். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். இதில் சினிமா நடிகர் என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழக அரசியலில் பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்து உள்ளார்கள்.

நடிகர் விஜய் கட்சி கொள்கைகள், தத்துவங்கள் மற்றும் எதை முன்வைத்துச் செல்லப் போகிறார் என்று சொல்லவில்லை. அரசியல் என்பது சினிமா மாதிரி இருக்காது. அரசியல் தொடங்குவது சுலபம். ஆனால், அதை தொடர்ந்து நடத்துவதுதான் மிகவும் சிரமம் என்பதை அனுபவசாலி என்ற முறையில் கூறுகிறேன். சீமான், விஜயகாந்த், பாக்கியராஜ் போன்ற நடிகர்கள் போன்று நடிகர் விஜயும் கட்சி ஆரம்பிப்பது சுலபம். ஆனால், தொடர்ந்து நடத்துவது என்பது கடினம் என்பதை விஜய் உணர்ந்து இருப்பார்.

நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு, ஒரு தேர்தலில் அவர்கள் பெறும் வாக்கு வங்கி பொறுத்துதான் கருத்து சொல்ல முடியும். ஊழல், லஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என விஜய் அறிக்கையில் உள்ளது. அரசியலில் தூய்மை, நேர்மை எவ்வளவு சிரமம் என்பது தெரியும். அதை நோக்கி அனைத்து அரசியல் கட்சிகளும் பயணிக்க வேண்டும். நடிகர்களுக்கு சினிமாவில் கிடைக்கக்கூடிய வரவேற்பு வேறு. ஆனால், அரசியலில் பயணிக்கும்போது எதிர்மறை விமர்சனங்களும் வர வாய்ப்பு உள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கை வாசிப்பு என்பது பாஜகவின் தேர்தல் பிரச்சாரமாக உள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசு சோதனைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ (NIA) சோதனை சீமானுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் வகையில் இருக்கலாம்” என ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இறங்குமா? திராவிட கட்சிகளுக்கு இணையான போட்டியா? - செய்தித் தொடர்பாளர் அளித்த பிரத்யேக தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.