ETV Bharat / opinion

2030க்குள் 7 டிரில்லியன் பொருளாதாரம் சாத்தியமா? இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? - டிரில்லியன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 10:52 PM IST

2030 ஆண்டுக்குள் இந்திய பொருளாதார 7 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை நோக்கி பயணித்து வரும் நிலையில், இலக்கை அடைய இடையூறாக உள்ள நான்கு சவால்கள் குறித்து ராதா ரகுராமபத்ருணி விவரிக்கிறார்.

Etv Bharat
Etv Bharat

ஐதராபாத் : நடப்பாண்டு இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்னதாக, நிதி அமைச்சகத்தின் பொருளாதாரப் பிரிவு, இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பாய்வு என்ற தலைப்பில் இரண்டு அத்தியாயங்களை வெளியிட்டது. கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் செயல்திறனை காட்டும் வகையில் விரிவான வருடாந்திர அறிக்கையான பொருளாதார சர்வே, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், ஜூலை மாதம், அதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் முழு பட்ஜெட்டு தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பொருளாதார சர்வே வெளியிடப்படும். நிதி அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்தியப் பொருளாதாரத்தின் மதிப்பாய்வு அறிக்கையானது, கடந்த l0 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான கொள்கை தலையீட்டையும், எதிர்கால வளர்ச்சிக்கான கணிப்புகளையும் கூறப்பட்டு இருக்கும்.

அதன்படி, பட்ஜெட்டுக்கு முன்னதாக நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளில் அதாவது 2030க்குள் 7 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்றும், 2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் வளர்ச்சியடைவததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், சேவைத் துறையில் செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தல், ஆற்றல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் நிலையான பணி சூழல் உள்ளிட்ட இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் நான்கு சவால்களையும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

செங்கடல் பிராந்தியத்தில் சமீபகாலமாக நிகழும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் அதனால் உலகளாவிய விநியோக சங்கிலியில் ஏற்பட்டு உள்ள விரிசல், 2023 ஆம் அண்டு உலகளாவிய வர்த்தகத்தின் மெதுவான வளர்ச்சி உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டப்பட்டு உள்ளது. அதேநேரம், இந்திய பொருளாதாரம் இந்த சவால்களை எதிர்கொள்ள முன்பை விட சிறப்பாக உள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட கொள்கைகள் அதற்கு காரணியாக மாறி உள்ளதாகவும் அந்த அறிக்கயில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

அண்மைக் காலமாக செயற்கை நுண்ணறிவின் இன்றியமையாத வளர்ச்சி என்பது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளதாக கருதப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு சேவை துறை வேலைவாய்ப்பில் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதால் பணி பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் மேல் சேவை துறைகள் பங்களிப்பதால் குறிப்பாக இந்தியாவுக்கு சிக்கலான சூழலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வளர்ச்சியின் கணிப்புகள் என்பது இந்த சவால்களுக்கு மத்தியிலும் 7 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சிக்கல்கள் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருவதால், வளரும் நாடுகள் தங்கள் கார்பன் உமில்வு இல்லா இலக்குகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பதில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. அதேபோல் இந்தியாவுன் 2070 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறது.

எரிசக்தி பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றுக்கு இடையேயான வர்த்தகம் என்பது பல்வேறு கட்டங்களை கொண்ட பன்முகப் பிரச்சினையாகும், அதை கொண்டே புவிசார் அரசியல் தொழில்நுட்பம், நிதி, பொருளாதார வளர்ச்சியை நாடுகள் சீரான அளவில் நகர்த்தி வருகின்றன. கார்பன் உமிழ்வு இல்லா இலக்கு என்பது உலக பொருளாதாரத்தின் ஆணிவேரை ஆட்டிப் பார்க்கும் செயல்களில் ஒன்றாகவும் காணப்படுகிறது.

இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த கணக்கு என்பது குறைந்தபட்சம் 2055 முதல் 2056 வரை நீடிக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. 2041ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் புது உச்சத்தை எட்டஇலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள நிலையில், திறன் நிறைந்த பணியாளர்கள் எண்ணிக்கை என்பது மிகவும் முக்கியமானதாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை மூலதன முதலீடு என்பது அதிகரித்து உள்ளது. நிதித் துறை, சுகாதாரம், உணவு உள்ளிட்ட துறைகளில் கடன் வளர்ச்சி என்பது வலுவான நிலையில் இருப்பது இந்திய பொருளாதாரத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்ல பெரிதும் உதவுகிறது. நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதில் காலநிலை மாற்றம், மீள்தன்மை சீரமைப்பு மற்றும் பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு ஆகியவற்றிற்கு தேவையான முதலீட்டு ஆதாரங்களை பெருக்குவதன் அவசியத்தை உணர்த்துகிறது.

இந்திய தொழில்துறையில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் கடந்த 2017 - 2018ல் நிதி ஆண்டில் 23 புள்ளி 3 சதவீதத்தில் இருந்து 2022-2023 நிதி ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது இந்தியாவில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கிய டெக்டோனிக் மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

இதனிடையே கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, தொழில் உள்ளிட்ட துறைகளில் புதிய ஸ்டார்ட் அப்களை தொடங்குவதற்கு ஏதுவான சூழலை மேம்படுத்துவதன் மூலம் தொழிலாளர் பாலின சமத்துவம், அரசின் மூலதன செலவீனங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் நிதி சமநிலையை பரமரிக்க முடியும்.

2024ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின் படி இந்தியா உலகளாவில் 4 ஆயிரத்து 112 பில்லியன் டாலர் மொத்ட உள்நாட்டு உற்பத்தியுடன் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. முதல் நான்கு இடங்களில் ஜப்பான் (4 ஆயிரத்து 291 பில்லியன் டாலர்), ஜெர்மனி (4 ஆயிரத்து 730 பில்லியன் டாலர்), சீனா (18 ஆயிரத்து 566 பில்லியன் டாலர்), மற்றும் அமெரிக்கா (27 ஆயிரத்து 974 பில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.

2024- 2025 நிதி ஆண்டில் இந்திய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியானது 10 புள்ளி 5 சதவீத வளர்ச்சியின் அடிப்படையில் 4 புள்ளி 2 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டும் என கணிக்கப்பட்டு உள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள் மூன்று பெரிய பொருளாதாரமாக இந்திய வளர இந்த சதவீதம் என்பது 9 புள்ளி 1 ஆக உயர வேண்டும் என்பது முக்கியம். இந்த வளர்ச்சி அடுத்த 3 ஆண்டுகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்டு உள்ள நான்கு சவால்களுக்கும் முதலீட்டு செலவினங்களை அதிகரிப்பது, உற்பத்தித் திறனை அதிகரிப்பது, சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துதல், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்வது, விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை உயர்த்துவது உள்ளிட்ட முக்கியமானதாகும்.

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 7 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொருளாதாரம் தற்போது சீரான இடைவெளியில் உள்ள போதிலும் கடந்த 10 ஆண்டுகளில் பல சவால்களுக்கு மத்தியில் நிறைய பின்னடைவுகளை சந்தித்து உள்ளது என்பது நிதர்சனம்.

இதையும் படிங்க : உணவு பாதுகாப்பு, விவசாய மானியங்களில் இந்திய எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? WTO மாநாட்டை அலங்கரிக்குமா இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.