ஐதராபாத்: வழக்கத்திற்கு மாறாக மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் வெற்றியாளர்கள் தோல்வி அடைந்துவிட்டோம் என்று எண்ணவும், தோல்வி கண்டவர்கள் வெற்றியடைந்ததை போல் உணரும் வகையில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. விரிவாக கூற வேண்டும் என்றால், பாஜக பெரும்பான்மைக்கான 272 இடங்களை மட்டும் பெற வேண்டு என திட்டமிடவில்லை, மாறாக அவர்களது எதிர்பார்ப்பு என்பது 400 இடங்களை கைப்பற்றுவது என்பதே இருந்தது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியானதில் பாஜகவுக்கு 240 இடங்கள் மட்டுமே கிடைத்தது, அவர்களை தோல்வி அடைந்தது போல் உணரச் செய்தது. அதேநேரம் பெரிதும் எதிர்பாராத வகையில் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியை இந்த இடத்தில் உற்றுநோக்க வேண்டும், மக்களவை தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
400 இடங்களை கைப்பற்றுவோம் என இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வந்த பாஜகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களில் 32 இடங்கள் பற்றாக்குறையாக அமைந்தன. 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசால் ஒட்டுமொத்த மக்களவை தொகுதிகளில் பாதி இடங்களை கூட கைப்பற்ற முடியவில்லை.
கடந்த 2014, 2019 மற்றும் 2024 ஆகிய மூன்று மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் முறையே 44, 52 மற்றும் 99 ஆகிய இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த மூன்று தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற தொகுதிகளை மொத்தமாக கூட்டினால் கூட 2024 மக்களவை தேர்தலில் பாஜக வென்ற தொகுதிகளில் 45 இடங்கள் பின்தங்கியே காங்கிரஸ் கட்சி உள்ளது. இதனால் மக்களவை தேர்தலில் வெற்றி கண்டதா என ராகுல் காந்தியிடமே கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.
அதேநேரம் தேர்தல் தோல்வியை தாண்டி பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைப்பதை தடுக்க வேண்டுமெனக் கருதி போட்டியிட்டு இருந்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியாகவே கருதப்படும். ஆனாலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராவதை காங்கிரசால் தடுக்க முடியவில்லை.
இன்னும் இதை வெளிப்படையாக கூற வேண்டும் என்றால், 2024 மக்களவை தேர்தல் முடிவுகளை ஒப்புட்டு ராகுல் காந்திக்கு ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டுமெனில், கிரிக்கெட் உலகில் இருந்து ஒரு உதாரணத்தை பரிசீலிக்கலாம். விராட் கோலி பல போட்டிகளில் மூன்று சதங்களை அடிப்பேன் என பகிரங்கமாக அறிவிக்கிறார் என வைத்துக்கொள்வோம்.
ஆனால் இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சதம் அடித்த பிறகு மூன்றாவது போட்டியில் மூன்று இலக்க எண்களை தொடாமல் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் அவுட்டானார் என்றால் அவரை தோல்வியுற்றவர், நல்ல பேட்ஸ்மேன் இல்லை என அழைக்க முடியுமா? இதுவே சிறந்த உதாரணம்.
400 தொகுதிகளை கைப்பற்றுவதே இலக்கு என்ற பாஜகவின் முழக்கமே அவர்களுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தக் கூடியதாக மாறிவிட்டது. 400 இடங்களை பாஜக கைப்பற்றினால் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை மாற்றக் கூடும், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கான இடஒதுக்கீடுகளை நிறுத்தப்படும் என்ற பல்வேறு பிரசாரங்களை பாஜகவுக்கு எதிராக தேர்தலில் காங்கிரஸ் முன்வைத்தது.
அதன் காரணமாகவே உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிக்கு பெரும்பாலான தலித் சமூகத்தினர் வாக்களிக்க வழிவகுத்தது. மாயாவதியின் பகுஜான் சமாஜ் கட்சியும் இந்த தேர்தல் யுக்தியில் ஈடுபட்டது. 400 இடங்களில் வெற்றி இலக்கின் காரணமாக 20 சதவீத இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டனர்.
மேலும், மீண்டும் மோடி பிரதமராக வருவதைத் தடுக்க முயற்சிகள் நடைபெற்றன. தேர்தல் பிரசாரத்தின் இடையே அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சூளுரைகளை அறிந்து அதை தடுக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டது.
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடுகளை கைவிட்டு அதை இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என்று மோடி கூறியது, அரசியல் சாசனம் நிராகரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை எதிர்க்கும் வகையில் இருந்தது. எவ்வாறாயினும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு அலை, பாஜகவுக்கு எதிராக திரும்பி அவர்களுக்கு எதிரான வாக்குகளாக மாறின.
மௌலவிகள் மற்றும் முல்லாக்கள் மற்றும் பிற சமூகத் தலைவர்களின் அறிவுரைக்கு பதிலளித்து, பாஜகவை தோற்கடிக்க இஸ்லாமியர்கள் ஒரு மனிதனைப் போல வாக்களித்தனர். அதேநேரம் உத்தர பிரதேசத்தில் பகுஜான் சமாஜ் அல்லது பிற குழுக்களால் நிறுத்தப்பட்ட பலவீனமான இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை அவர்கள் வீணாக்கவில்லை.
மூன்று மக்களவைத் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை தோற்கடிப்பதில் இஸ்லாமிய வாக்காளர்கள் ஆற்றிய பங்கு குறித்து அசாம் முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வ சர்மா கூட கூறுகிறார். இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தோற்கடிக்கப்பட்டதும் கூட அடங்கும்.
1990களில் இருந்து மக்களவை உறுப்பினராக இருந்து வரும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மேற்கு வங்கம் மாநிலம் பெஹ்ரம்பூர் தொகுதியில் 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் குஜராத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானிடம் அவர் படுதோல்வி கண்டார். இதில் பெஹ்ரம்பூர் தொகுதி வாக்காளர்களில் 52 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெஹ்ரம்பூர் தொகுதியில் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், கடந்த 30 ஆண்டுகால மக்களவை பணியில் பெஹ்ரம்பூர் தொகுதியில் பெற்ற தோல்வியை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். அங்கு கிரிக்கெட் வீரர் யூசுப் பதானின் வெற்றியை உறுதி செய்ததில் இஸ்லாமியர்களின் பங்கு முக்கியத்தக்கதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மற்றொரு சம்பவமாக உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் தொகுதியில் நூறு சதவீதம் இஸ்லாமியர்கள் வசிக்கும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசால் கிட்டத்தட்ட 550 ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. கிராமத்தின் 2 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட வாக்குகள் அப்படியே பாஜக ஆதரவாக பதிவாகின.
தொகுதி ஒதுக்கீடு செய்வதில் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற மாநில தலைவர்களின் விருப்பத்தை பாஜக மத்திய தலைமை புறக்கணித்தது என்பதில் சந்தேகமில்லை. தொகுதி ஒதுக்கீடு மட்டுமின்றி, முழு தேர்தல் நடவடிக்கையின் மற்ற அம்சங்களும் டெல்லியின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனவே, பாஜக 272 இடங்களை தாண்டாததற்கு மத்திய தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
இதனிடையே தொடக்கத்தில் காங்கிரசின் கூடாரத்தில் இருந்த நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு தேர்தலுக்கு பின்னர் மோடியின் படகில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படலாம். பெரும்பான்மை இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் உருவாக்கப்பட்டு உள்ள இந்தியா கூட்டணியில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் அதனால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் அபாயம் எனக் கூறலாம்.
இரண்டாவதாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றாலும், மோடி அரசு இதர இணைக்கப்படாத மற்றும் சுயேட்சை எம்பிக்களின் ஆதரவை பெற்று மீதியுள்ள ஆட்சியை நடத்த முடியும். மோடி பிரதமரானால் தங்கள் மாநிலங்களுக்கு சாதகமான சூழல் மற்றும் நிதியுதவிகளை பெற முடியும் என்பதே இரு கட்சிகளின் எண்ணப்பாடாக உள்ளது.
மேலும், வாஜ்பாய் போல் மோடி எப்போதும் இணக்கமாக இருப்பதில்லை, அவர் வளைந்து கொடுத்து செல்லக் கூடியவர் அல்ல. ஒரு வலுவான தலைவர், தனது கூட்டணி கட்சிகளின் மிரட்டல்களுக்கு சரணடைவதை விட முன்கூட்டியே தேர்தலை நடத்த விரும்புவார். மோடியின் தேசிய ஜனநாயக கூட்டணி 3வது ஆட்சி, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 1.0 மற்றும் 2.0 அரசுகளில் மன்மோகன் சிங்கின் நிலையை விரும்பாமல் உறுதியாக இயங்கக் கூடியவர்.
புதிய அரசு தன் மீதான் விமர்சனங்களை தவிர்க்க, தகர்க்க போராடும். அதேநேரம் பாஜக அரசுக்கு எதிரான பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பதில் எதிர்க்கட்சிகள் எந்த நிலைக்கும் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. தேர்தல் முடிவு குறித்த கருத்து கணிப்புகளின் போது பங்குச் சந்தையில் நடந்த பல்வேறு ஏற்றம் மற்றும் இறக்கங்கள், பல்வேறு முறைகேடுகளில் மோடி மற்றும் அமித் ஷா பின்னால் இருந்து இயக்கியதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியிடம் இருந்து வரும் ஆக்ரோஷமான மற்றும் மோதல் தொடர்பான கருத்துகளை மோடி அரசாங்கத்தால் உறுதியான கையோடு அடக்கப்படும், ஏனென்றால், மோடி, மன்மோகன் சிங் போல் பலவீனமானவர் அல்லது சாந்தகுணமுள்ளவர் அல்ல..
இதையும் படிங்க: மக்களவை தேர்தல் வெற்றியை தோல்வி போல் உணரும் பாஜக! 400 எதிர்பார்ப்பில் 32 பற்றாக்குறையானது எப்படி? - Lok Sabha Election results 2024