ETV Bharat / opinion

செயின்ட் மார்ட்டின் தீவு மீதான அமெரிக்காவின் ஆதிக்கவெறி.. இந்தியாவுக்கு சொல்லும் பாடம் என்ன? - military base in indian ocean

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 5:36 PM IST

வங்காள விரிகுடா பகுதியில் அமைந்துள்ள செயின்ட் மார்ட்டின் தீவு மீதான அமெரிக்காவின் ஆதிக்கவெறி அண்மையில் சர்வதேச அளவில் பேசுபொருளானது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா போன்ற நாடுகள் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்வு உலகிற்கு உணர்த்தியுள்ளது.

செயின்ட் மார்ட்டின் தீவு  காட்சி
செயின்ட் மார்ட்டின் தீவு காட்சி (Credit - Getty Images)

ஹைதராபாத்: புவிசார் உலக அரசியலில் தெற்காசிய பகுதி ஆச்சரியங்கள் மற்றும் சவால்கள் நிறைந்த பிராந்தியமாகவே திகழ்ந்து வருகிறது. தற்போதைய ரஷ்யா ஒரு காலத்தில் சோவியத் ஒன்றியமாக இருந்தபோது. இப்பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. அதன் இடத்தை தற்போது சீனா நிரப்புகிறது. மறுபுறம், அமெரிக்காவும் தெற்காசியாவில் தமது ஆளுமையை செலுத்தி கொண்டிருக்கிறது.

ஆதிக்க சக்திகளாக விளங்கும் வல்லரசு நாடுகளுக்கு இடையே, தெற்காசியாவை மையமாகக் கொண்டு ஆதிக்க போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தை ஆளுகை செய்வதில் வல்லரசு நாடுகளுக்கு இடையே மெளன யுத்தமே நடந்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதில், வலுவான கடற்படையை கொண்ட சீனா ஒருபுறமும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள குவாட் அமைப்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா மறுபுறமும் நிற்கின்றன.

இந்த நிலையில் வங்காள விரிகுடாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள செயின்ட் மார்ட்டின் தீவு மீதான அமெரிக்காவின் ஆதிக்கவெறி அண்மையில் சர்வதேச அளவில் பேசுபொருளானது. இந்தியப் பெருங்கடல் பகுதிக்குட்பட்ட வங்காள விரிகுடா, மகத்தான மூலோபாயத்துடன்கூடிய புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். குறிப்பாக, மலாக்கா ஜலசந்தி (அந்தமான் கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் ( பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை இணைக்கும் நீர்வழி) ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அத்துடன்.

கடல் வர்த்தகத்தின் அடிப்படையில் வங்காள விரிகுடா பல தெற்காசிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ளது, அவற்றில், இந்தியாவைத் தவிர பிற நாடுகளில் பெரும்பாலானவை தற்போது உள்நாட்டு பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வருகின்றன.

அண்மையில் ஆட்சி மாற்றத்தை சந்தித்துள்ள நேபாளம், மியான்மரில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர், வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டம் தெற்காசிய பிராந்தியத்தில் ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இந்தியாவுக்கும் வெளிப்புற சவால்கள் இருந்தாலும், வலுவான ஜனநாயக அடித்தளத்தை கொண்டுள்ளதால், உள்நாட்டில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் திறனில் இந்தியா உறுதியாக உள்ளது.

தெற்காசியாவில் பெரும் அதிகார அரசியல் என்பது வரலாற்று ரீதியாக சிக்கலான உறவுகளால் குறிக்கப்பட்டுள்ளது. பனிப்போர் காலத்தின்போது, அமெரிக்கா மற்றும் சோவித் யூனியன் இடையேயான அதிகார போட்டி இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் வெளிப்பட்டது. இரண்டு வல்லரசுகளுக்கு இடையேயான இந்த அதிகாரப் போட்டி, தெற்காசிய பிராந்திய நாடுகளை சங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த சங்கடத்தில் இருந்து விடுபட, தெற்காசியாவைச் சேர்ந்த பிராந்திய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையை நாடின. அதிகார போட்டிக்கு உட்படாத அமைதி பகுதியாக இந்தியப் பெருங்கடல் மண்டலம் திகழ வேண்டும் என்ற தீர்மானத்தையும் அந்நாடுகள் முன்மொழிந்தன. அதனையடுத்து, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்த அடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவும், சோவித் ஒன்றியமும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அடக்கி வாசிக்க ஆரம்பித்தன. 1971 இல் நடைபெற்ற வங்தேச விடுதலைப் போரின்போது இது வெளிப்பட்டது.

ஆனாலும், தெற்காசிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா என, இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் அரசில் ஒழுங்கு இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு மாறிவிட்டது. குறிப்பாக, பக்ஹைரனில் தனது கடற்படை தளம், ஜிபூட்டியில் உள்ள கடற்படை வசதிகள், இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் டியாகோ கார்சியாவில் அமைத்துள்ள கடற்படை தளம் என இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா ஓர் அசைக்க முடியாத சக்தியாக திகழ்கிறது. இந்தியப் பெருங்கடலில் இருந்து அமெரிக்கா வெகுதொலைவில் அமைந்திருந்தும், இப்பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் அமெரிக்காவின் ஆதரவு சக்தியாக உள்ளன.

செயின்ட் மார்ட்டின் தீவை மையமாகக் கொண்டு சமீபத்தில் எழுந்த விவாதங்களுக்கு, இந்த தீவின் மீதான அமெரிக்காவின் ஆதிக்க வெறிதான் காரணம் என்பது உலகமறிந்த ரகசியம். வங்காள விரிகுடா, ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதன் மூலம், அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு புரிந்து கொள்ளப்படுகிறது. இருப்பினும், பிராந்திய பாதுகாப்பு, இந்தோ - பசிபிக் வியூகம் உள்ளிட்ட காரணங்களால், வங்களா விரிகுடாவில் அமைந்துள்ள செயின்ட் மார்ட்டின் தீவில் மற்றொரு ராணுவ தளத்தை நிறுவும் அமெரிக்காவின் எண்ணம் கைக்கூடுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றுதான் கூற வேண்டும்.

இந்த வியூகங்களை எல்லாம் தாண்டி, செயின்ட் மார்ட்டின் தீவில் கடற்படை தளத்தை அமைக்கும் முயற்சியை அமெரிக்கா முன்னெடுத்தால் அது அதன் சிறகுகளை அதுவே சிதைத்து கொள்வதற்கு சமமான முயற்சியாகவே கருதப்படுகிறது. காரணம், இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் வங்கதேசம் மற்றும் மியான்மர் உள்நாட்டு போராட்டங்களில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியப் பெருங்கடலில் தனது ஆதிக்க கரத்தை விரிவாக்கும் முயற்சியை அமெரிக்கா முன்னெடுத்தால் அதன் விளைவாக, சீனா மற்றும் இந்தியாவின் அதிருப்தியை அமெரிக்கா சம்பாதிக்க நேரிடும்.

மொத்தத்தில், இந்தியப் பெருங்கடலில் மற்றொரு ராணுவத் தளத்தை அமெரிக்கா உருவாக்கினால், அதனால் நன்மைகளை விட தீமைகள்தான் அதிகம். மாறாக, இப்பிராந்தியத்தில் இந்தியா போன்ற நாடுகள் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே, செயின்ட் மார்ட்டின் தீவை மையமாகக் கொண்டு அண்மையில் எழுந்த விவாதம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

இதையும் படிங்க: வங்கதேசத்தின் அரசியல் நெருக்கடியும், அதற்கான காரணங்களும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.