ETV Bharat / opinion

இந்தியாவின் 5 டிரில்லியன் பொருளாதார இலக்கு.. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆய்வில் செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து! - அராய்ச்சி மற்றும் மேம்பாடு

5 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வரும் நிலையில், நாட்டில் பல்துறை வளர்ச்சிக்கான பணிகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான பங்கு குறித்து மூத்த பத்திரிகையாளர் பொட்லூரி வெங்கடேஸ்வர ராவ் விவரிக்கிறார்...

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 10, 2024, 8:02 PM IST

ஐதராபாத் : இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைக்கு மிகப்பெரிய உந்துதலாக மத்திய பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்ற செய்தி வெளி வந்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தனியார் நிறுவனங்கள் எரிசக்தி, பருத்தி உற்பத்தி, விண்வெளி சுற்றுப்பயணம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராஉச்சி மற்றும் மேம்ப்பாட்டில் முதலீடு செய்ய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காகவோ, குறிப்பிட்ட அமைச்சகத்தை இலக்காக கொண்டோ இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை. இந்த அறிவிப்பின் மூலம் பொது மற்றும் தனியார் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஊக்குவிக்கப்படுவதற்கான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பங்கு குறைவாகவே உள்ளது. மேலும் இதன் பங்கை அதிகரிக்க தொழில்துறை அமைப்பான NASSCOM நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. அதேபோல் மத்திய திட்டக் குழுவான நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில், உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2008-9 நிதி ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 0.8 சதவீதமாக இருந்த நிலையில் கடந்த 2017-18 நிதி ஆண்டில் அது 0.7 சதவீதமாக குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மொத்த செலவீனம் குறைவு என தரவுகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவை முறையே 1.2%, 1.1%, 2% மற்றும் 0.8 சதவீதத்திற்கும் மேல் செலவிடும் நிலையில், இந்தியாவின் பங்கு மிகக் குறைவு எனக் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் உலக சராசரியே 1 புள்ளி 8 சதவீதமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகளாவிய புது கண்டுபிடிப்புகள் குறியீடு 2019ன் படி, உலகளாவிய வெற்றி மற்றும் புது கண்டுபிடிப்புகளின் 129 நாடுகள் தரவரிசை பட்டியலில் இந்தியா 52வது இடத்தை பிடித்து உள்ளது. உலகளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க சிறந்த சூழலுக்கான வரிசையில் 5வது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு, இது மோசமான தரவரிசை என நிபுணர்களால் கூறப்படுகிறது.

செழிப்பான நுகர்வோர் சந்தை இருந்த போதிலும் தொழில்நுட்ப பொருளாதாரத்தின் மெதுவான வளர்ச்சி விகிதத்தின் காரணமாக இந்தியாவின் இருப்பிடம் என்பது சர்வதேச அளவில் மோசமாக காணப்படுவதாக கூறப்படுகிறது. புது கண்டுபிடிப்புகள் இல்லாததே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் இந்தியாவின் நிதி செலவினத்தின் அளவை எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள சக போட்டி நிறுவனங்களுக்கு முன்பாகவே நிறுவப்பட்டன, மேலும், வெளிநாட்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் யோசனைகளை பின்பற்றி இந்திய நிறுவனங்கள் உருவாக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள 763 மாவட்டங்களில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 718 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ள நிலையில், உலகளவில் ஸ்டார்ட்-அப்களுக்கான 3வது பெரிய சுற்றுச்சூழல் அமைப்பாக இந்தியா மாறியுள்ளது என்பதை முற்றிலும் மறுக்க முடியாது.

அதேநேரம், இந்தியாவில் உருவாகும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் யோசனைகளை பிரதி எடுக்கும் கிளைகளாக உருவாகின்றன. இந்திய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழலுக்கான சவால், உள்கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அரசின் செயலற்ற தன்மையை காரணம் எனக் கூறப்படுகிறது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை முறையே 2.9%, 3.2% மற்றும் 3.4% ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடுகின்றன. இஸ்ரேல் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4.5% ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிடுகிறது, இது உலகிலேயே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் குறைந்த நிதி செலவிடும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மேற்கோள்காட்டும் முக்கிய காரணங்களில் ஒன்று, அத்துறையின் முதலீடுகளில் இருந்து முடிவுகளை திரும்பப் பெற எடுக்கும் அதிகபட்ச நேர விரயம் என்பதே. இந்தியா போன்ற நாடுகள் பட்டினி குறியீடு, நோய் கட்டுப்பாடு மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் பொருளாதாரத்தை சீரமைப்பது போன்ற பெரிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த முனைவதால், அதற்கான திட்டங்களில் நிதி ஒதுக்கீடு என்பது அதிகளவில் இருக்கும், அதன் காரணமாகவே அராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டாமல் போவதாக கூறப்படுகின்றன.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து புது கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட் அப், தொழில்சார்ந்த முயற்சிகளை ஊக்குவிப்பதை தவறும்பட்சத்தில், பொது மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் இடங்களை தேடி சென்றடையைக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேவை அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் இடம் பெயர்வு என்பது வெளியூர், மாநில, வெளி மாநிலம், வெளிநாடு என்ற அளவில் சென்றடையும் எனக் கூறப்படுகிறது. இந்தியா 5 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி பயணித்து வரும் நிலையில், குறைந்தபட்சம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் 2 சதவீதம் அளவிற்காவது நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நிபுணர்க்ள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான இந்தியாவின் நிதி செலவீனம் என்பது தலா 43 டாலர் என்ற அளவில் உள்ளது. உலகளவில் ஒப்பிடுகையில் மிகக் குறைவு எனக் கூறப்படுகிறது. இந்தியாவின் பிரிக்ஸ் மற்றும் ஆசிய கூட்டாளி நாடுகளான ரஷ்யா (285 டாலர்), பிரேசில் (173 டாலர்) மற்றும் மலேசியாவை (293 டாலர்) ஒப்பிடுகையில் மிகவும் பின்னோக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பெருவாரியான நிறுவனங்களின் நிபுணர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி உள்பட பலர் ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டில் இந்தியாவின் நிதி பங்கீடு குறித்து சுட்டிக்காட்டி உள்ளனர். அண்மையில் இன்போசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக தனியார் நிறுவனங்கள் செய்ய வேண்டிய பங்களிப்பு மற்றும் செலவு குறித்த அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், ஆராய்ச்சியில் அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்றும் ஆராய்ச்சிக்கான செலவு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது 0.7 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர வேண்டும் என்றும், இதில் தனியார் பங்களிப்பு தற்போது 0.1 சதவீதமாக உள்ள நிலையில் 1.5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்கள் குறித்த விரிவான அறிக்கையை கடந்த 2020ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வெளியிட்டு இருந்தது. அதன்படி 2017-18ஆம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து, 61.4 சதவிகிதம் டிஆர்டிஒவிற்கும், ICAR, CSIR, DST, DBT, ICMR போன்ற பொது ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 37 சதவீதத்தை விண்வெளி துறை, மற்றும் அணுசக்திக்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் முதலீடு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலான வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில், பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தனியார் துறையால் மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில், இந்த செலவினம் பெரும்பாலும் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது. எனவே, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவீனத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு சதவீதம் அதிகமாக இருக்க வேண்டும்.

2011-12 மற்றும் 2017-18 ஆண்டின் இடையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 752ல் இருந்து ஆயிரத்து 16 ஆகவும், முனைவர் பட்டங்கள் ஆண்டுதோறும் 10 ஆயிரத்து 11ல் இருந்து 24 ஆயிரத்து 474 ஆகவும் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் முனைவர் பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒத்துப்போகவில்லை என்பதால் முனைவர் பட்டம் பெறுவதற்காக மேற்கொள்ளும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியின் தரம் மோசமடைய வழிவகுப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : நாட்டின் 75 குடியரசு தினம்! அரசியலமைப்பு கட்டமைப்பை உருவாக்கியதன் நோக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.