ETV Bharat / lifestyle

மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பதில் சிரமமா?ஆடைகளில் துர்நாற்றம் வீசுகிறதா?..சிம்பிள் டிப்ஸ் இதோ!

வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும் முன் டிடர்ஜெண்டுடன் ஒரு கப் வினிகர் சேர்த்தால் மழைக்காலங்களில் துணிகளில் இருந்து ஏற்படும் துர்நாற்றம் வராது..இது போன்ற குறிப்புகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

author img

By ETV Bharat Lifestyle Team

Published : 5 hours ago

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - GETTY IMAGES)

மழைக்காலங்களில் நம்முடைய அன்றாட வேலைகளை செய்வதில் சில சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அப்படியான ஒன்று தான், துவைத்த துணிகளை உலர்த்துவதும், ஈரப்பதத்தால் துணிகளில் இருந்து வரும் துர்நாற்றத்தை தடுப்பதும். சுற்றுச்சூழலில் அதிக ஈரப்பதம் இருப்பதால் துவைத்த துணிகள் உலராமல் ஈரப்பதத்துடனே இருக்கும். இதனால், துணிகளில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடுகின்றன. இதைத் தவிர்க்க உதவும் சில எளிய வழிகள் இதோ...

துணிகளை காய வைப்பது எப்படி?:

துணிகளை உலர்த்த உதவும் ஸ்டாண்டுகளில் போதிய இடைவெளிவிட்டு துணிகளை உலர்த்தவும்
துணிகளை உலர்த்த உதவும் ஸ்டாண்டுகளில் போதிய இடைவெளிவிட்டு துணிகளை உலர்த்தவும் (Credit - GETTY IMAGES)
  • முதலில், மழைக்காலத்தில் அதிக எடையுள்ள துணிகளை துவைப்பதை தவிர்க்க வேண்டும். எப்போது, எந்த நேரத்தில் எந்த துணியை துவைக்க வேண்டும் என பிரித்துக்கொள்ள வேண்டும்.
  • துணிகளை உலர்த்தும் முன் அதில் உள்ள தண்ணீர் முழுவதும் வடிந்துள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். வெளியிடங்கள் செல்வதற்கு தேவைப்படும் துணிகளை மட்டுமே துவைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • வீட்டிற்குள் கயிறு கட்டி காயவைப்பதை விட துணிகளை உலர்த்த உதவும் ஸ்டாண்டுகளில் போதிய இடைவெளிவிட்டு துணிகளை உலர்த்தவும்.
  • மழைக்காலங்களில் வீட்டிற்குள் துணிகளை காய வைப்பதால் வீட்டில் வசிப்பவர்களின் ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில், வீட்டில் உள்ள ஈரப்பதத்தை கட்டுப்படுத்த ஏர் பியூரிபையர் பேக் பயன்படுத்தலாம். மாறாக, ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை ஒரு துணியில் கட்டி வைப்பதால் அறையில் இருக்கும் ஈரப்பத்த்தை உப்பு உறிஞ்சு விடுகிறது.
  • Hair Dryer: தொடர் மழையின் போது, இந்த தந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஹேர் ட்ரையர் (Hair Dryer) அல்லது டிஹைமிடிஃபையர் (Dehumidifier) மூலம் துணிகளை உலர வைக்கலாம். 2004 ல் 'அப்ளைடு தெர்மல் இன்ஜினியரிங்' இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஈரமான துணிகளை உலர்த்துவதில் ஹேர் ட்ரையர்கள் நன்றாக வேலை செய்வதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதையும் படிங்க: மழைக்கால நோய்கள்...குழந்தைகள் முதல் பெரியவர்களை பாதுகாப்பது எப்படி? மருத்துவர் பரிந்துரை!

மழைக்காலத்தில் துணிகளில் இருந்து துர்நாற்றம் வராமல் இருக்க இதை செய்யுங்கள்:

டிடர்ஜெண்டுடன் ஒரு கப் வினிகர் சேர்த்து அலசுவதால் மழைக்காலங்களில் துணிகளில் இருந்து ஏற்படும் துர்நாற்றம் வராது
டிடர்ஜெண்டுடன் ஒரு கப் வினிகர் சேர்த்து அலசுவதால் மழைக்காலங்களில் துணிகளில் இருந்து ஏற்படும் துர்நாற்றம் வராது (Credit - GETTY IMAGES)
  • வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும் முன் டிடர்ஜெண்டுடன் ஒரு கப் வினிகர் சேர்க்கவும். துணிகளை கையால் துவைக்கிறீர்கள் என்றால், துணிகளை ஊறவைக்கும் தண்ணீரில் டிடர்ஜெண்டுடன் சிறிது வினிகரையும் சேர்க்கவும். இப்படி செய்வதால் துர்நாற்றம் வராது.
  • துணிகளை அலசிய பின்னர், கடைசி தண்ணீரில் எலுமிச்சைச் சாறு பிழிந்து துணிகளை முக்கி எடுத்து உலர்த்தினால் வாசனை வராது.
  • லாவெண்டர், டீ ட்ரீ அல்லது யூகலிப்டஸ் போன்ற எண்ணெய்களில் இருந்து எதாவது ஒன்றை துணி அலசுவதற்கு முன் சில துளிகளை வாஷிங் மெஷினில் ஊற்றவும்.
  • இல்லையெனில், ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஏதேனும் அத்தியாவசிய எண்ணெயை சில துளிகள் எடுத்து, அதில் தண்ணீரைச் சேர்த்து, துணிகளை காய வைப்பதற்கு முன் லேசாக தெளிக்கலாம்.
  • 2018ம் ஆண்டு கார்மெண்ட்ஸ் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஆடை துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளைக் கொல்ல வினிகர் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: ஊறுகாயில் வெள்ளை நிறத்தில் பூஞ்சையா? மழைக்காலத்திடம் இருந்து ஊறுகாய்யை பாதுகாக்க டிப்ஸ் இதோ!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.