ETV Bharat / lifestyle

சப்பாத்திக்கு சூப்பர் சைடிஷான தால் மக்கானி..ஒரு முறை இப்படி செய்ங்க! - DAL MAKHANI RECIPE IN TAMIL

வட இந்தியா ஸ்டைலில், தால் மக்கானியை (Dal Makhani) உங்க வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 15, 2024, 3:22 PM IST

பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் இதர பகுதிகளில் பிரசித்தி பெற்ற சுவையான உணவான தால் மக்கானியை, நமது சுவைக்கு ஏற்ப வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். சப்பாத்தி மற்றும் தயிர் சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும் இந்த தால் மக்கானியை ஒரு முறை கண்டிப்பாக செய்து சாப்பிட்டு பாருங்கள்..

தேவையான பொருட்கள்:

  • கருப்பு உளுந்து - 1/2 கப்
  • கிட்னி பீனிஸ் - 1/4 கப்
  • வெங்காயம் - 1
  • தக்காளி - 3
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
  • வெண்ணெய் - 2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

தால் மக்கானி செய்முறை:

  1. குறைந்த பட்சம் 8 மணி நேரம் ஊறவைத்த கருப்பு உளுந்து மற்றும் கிட்னி பீன்ஸை சமைப்பதற்கு முன்பு, தண்ணீரில் நன்கு கழுவி குக்கரில் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 6 விசில் விடவும்.
  2. இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம்,பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்குங்கள்.
  3. அடுத்ததாக, நறுக்கி வைத்துள்ள தக்காளி, மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைக்கவும். இப்போது, நாம் முன்னதாக வேக வைத்த கிட்னி பீன்ஸ் மற்றும் உளுந்தை தண்ணீருடன் சேர்த்து வதக்கவும். இறுதியாக உப்பு சேர்த்து, பருப்புகளை நன்கு மசித்து விடவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்
  4. பின்னர், 15 நிமிடங்களுக்கு மூடி, இறக்கும் போது வெண்ணெய் சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான தால் மக்கானி ரெடி.

இதையும் படிங்க:

மூட்டு வலிக்கு தீர்வு தரும் ஆட்டுக்கால் சூப்...இப்படி செய்ங்க கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!

இட்லி,தோசை,சப்பாத்திக்கு அம்சமா இருக்கும் 'பூண்டு தொக்கு'..இப்படி செய்தால் 10 நாள் ஆனாலும் கெடாது!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETVBharat Tamil Nadu)

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.