ETV Bharat / lifestyle

வெற்றிலை கொடி செழிப்பாக வளர 'இந்த' மண்ணில் நட்டு வையுங்கள்..பெரிய இலைகள் நிச்சயம்! - HOW TO GROW VETRILAI PLANT IN HOME

வீட்டில் வெற்றிலை கொடி செழிப்பாக வளர்ப்பதற்கு சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.. அவை என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்...

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Oct 25, 2024, 2:17 PM IST

மருத்துவமும், மகத்துவமும் நிறைந்த வெற்றிலை கொடிகளை வீட்டில் வளர்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது? சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே வீட்டில் தள தளவென வெற்றிலை செடிகளை வளர்க்கலாம்...அந்த டிப்ஸ்கள் என்னென்ன? என்பதை பற்றி பார்க்கலாம்..

1.வெற்றிலை கட்டிங்: வெற்றிலை கொடிகளை நர்சரிகளில் இருந்து வாங்கும் போது அல்லது பக்கத்து வீடுகளிலிருந்து எடுக்கும் போது அவை, ஃபரஸ்ஸாக இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள். அந்த கொடியில் கட்டாயம் இலைகளும், குறைந்தது இரண்டு கணுப்பகுதிகள் இருக்க வேண்டும். குறிப்பாக, சிலந்தி கூடுகள் மற்றும் பூஞ்சைகள் இருக்கக் கூடாது.

2. வேர்ப் பகுதிகள் வேண்டாம்: வெற்றிலை கொடிகள் செழிப்பாக வளரும் என நினைத்து, சிலர் வேர்ப் பகுதிகளிலிருந்து எடுத்து நட்டு வைப்பார்கள். ஆனால், இது போன்றவை சில நேரங்களில் வாடி, உயிரற்று போய்விடும். கொடியின் நுனி அல்லது நடுப்பகுதிகளை எடுத்து நட்டு வைக்க வேண்டும்.

3. கணுப்பகுதியில் கவனம்: வெற்றிலை கொடிகளைத் தண்ணீரில் நன்கு கழுவிய பின்னர், கொடியின் கணுப்பகுதி மூழ்கிற அளவிற்கு ஒரு பெரிய கிளாஸ் அல்லது பாட்டிலில் நாம் குடிக்கும் நல்ல தண்ணீரை ஊற்றி நிழலில் வைத்து விடுங்கள்.மாற்று நாட்களில் தண்ணீரை மாற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம், 4 முதல் 5 நாட்களில் கணுப்பகுதியை சுற்றி வெள்ளை புள்ளி போன்று வேர் தோன்ற ஆரம்பிக்கும். தண்ணீரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்றுவதால் பூஞ்சைகள் வராது.

4. மண்ணிற்கு மாற்றுங்கள்: நாம் தண்ணீரில் வைத்த 25வது நாளில் வேர்கள் நன்றாக ஊடுருவி வளர்ந்திருக்கும். இப்போது இதை மண்ணில் நட்டு வைய்யுங்கள். அதற்கு முன்னதாக, வேர்ப்பகுதி அல்லது கொடியின் கீழ் பகுதியில் இலைகள் இருந்தால் அதனை நீக்கி நட்டு வையுங்கள். இல்லையென்றால், மண்ணிற்குள் இலைகள் அழுகி பூஞ்சை ஏற்படும்.

ஈரப்பதமான மண்ணில் வெற்றிலை செழிப்பாக வளரும்
ஈரப்பதமான மண்ணில் வெற்றிலை செழிப்பாக வளரும் (Credit - Getty Images)

5. எந்த வகை மண் சிறந்தது?: வெற்றிலை வளர்வதற்கு ஈரப்பதமான மண் மற்றும் வடிகால் வசதி இருக்க வேண்டும். சாதாரண தோட்ட மண்ணிலும் வெற்றிலை நன்றாக வளரும். ஆனால், குறிப்பாக, 60% செம்மண், 20% மணல் அல்லது கோக்கோ பீட், தொழு உரம் 20% என இந்த விகிதத்தில் மண் இருந்தால் வெற்றிலை செழிப்பாக வளரும். தொழு உரத்திற்குப் பதிலாகக் காய்கறி கழிவுகள் அல்லது வெர்மிகம்போஸ்டை சேர்த்துக்கொள்ளலாம்.

6. தண்ணீர் ஊற்றும் முறை: வெற்றிலை வளர்வதற்கு ஈரப்பதமான மண் தேவை என்பதால், தினசரி காலை மாலை என இரு முறை தண்ணீர் ஊற்றுங்கள். ஆனால், தண்ணீர் தேங்காதது போல வடிகால் துளைகள் போட்டுக்கொள்ளுங்கள். வெற்றிலைகளைத் தொட்டியின் நடுவில் நடாமல் ஓரத்தில் நட்டு வைக்க வேண்டும். நடுவில் கம்புகளை நட்டு வைத்தால் கொடி வளர்வதற்கு எளிதாக இருக்கும்.

7. Moss Stick நட்டு வையுங்கள்: மோஸ் ஸ்டிக்கை (Moss stick) கொடியுடன் நட்டு வைப்பதால் கொடிக்கு நன்கு சப்போர்ட் கிடைத்துச் செழிப்பாக வளரும். இந்த ஸ்டிக்குகள் நர்ச்சரிகள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கின்றன. இதை தேங்காய் நாரை பயன்படுத்தி வீட்டிலேயே தயார்ப் படுத்திக்கொள்ளலாம். இல்லையென்றால், மரக்கட்டையும் நட்டு வைக்கலாம்.

8. நேரடி வெயில் வேண்டாம்: கொடிகளை நேரடியான வெயிலில் வைக்கக்கூடாது. இதற்குச் சிறந்தது என்னவென்றால், கொடிகளை மர நிழலில் வளர வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால், இலைகள் பெரிதாகவும் செழிப்பாகவும் வளரும். இந்த கொடிகள் தரையில் வேகமாகப் படர்ந்து வளரும் தன்மையைக் கொண்டது தான். ஆனால், மற்ற செடிகளின் சத்துக்களை இதுவே எடுத்துக்கொள்ளும். தரமான வெற்றிலை கொடிகளை வளர்க்க இந்த முறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதையும் படிங்க:

தினமும் வெற்றிலை சாப்பிட்டால் இம்புட்டு நன்மைகளா..இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.