ETV Bharat / lifestyle

தலையில் பேன், ஈறு தொல்லையா? வாரத்திற்கு இரண்டு தடவை 'இதை' செய்தால் ஓடிவிடும்! - HOME REMEDY TO REMOVE HEAD LICE

கிராம்பை பொடி செய்து அரைத்து அதனுடன் வேப்ப எண்ணெய்யை கலந்து தலையில் தேய்த்து வந்தால் பேன் தொல்லை நீங்கும். இது போன்ற டிப்ஸ்களை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து பயன்பெறுங்கள்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETVBharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : Nov 4, 2024, 12:09 PM IST

ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் பட்டியலில் இந்த பேன், ஈறு பிரச்சனையும் ஒன்று. கருகருவென நீளமான முடி வேண்டும் என ஆசைப்படும் அனைவரும் இந்த பேன் பிரச்சனையையும் சமாளித்து தான் முடியை வளர்க்க வேண்டும். தலையில் ஒரு பேன் இருந்தாலும், அது ஏற்படுத்தும் அரிப்பை அனுபவித்தால் தான் அதன் வேதனை புரியும். இப்படி, நீங்களுக்கு பேன் தொல்லையால் அவதிப்பட்டால் இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்து பாருங்கள்..

பூண்டு சாறு: உங்கள் முடி அடர்த்திக்கு தகுந்தவாறு பூண்டுகளை எடுத்து நன்றாக அரைத்து அதன் சாற்றை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த சாற்றை முடியின் வேர்களில் நன்றாக தேய்த்து 2 மணி நேரம் ஊற வைத்த பின்னர் தலைக்கு குளித்தால் பேன்கள் நீங்கும். பூண்டு சாற்றில் உள்ள எரியும் தன்மை பேன்களை நீக்க உதவியாக இருக்கிறது.

கற்றாழை மற்றும் வேப்பிலை: தேய்காய் எண்ணெயில் கற்றாழை மற்றும் வேப்பிலையை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து, வடிகட்டி முடியின் வேர்களில் தேய்த்து 2 மணி நேரத்திற்கு பின் குளித்தால் பேன்கள் நீங்கும்.

கிராம்பு + வேப்ப எண்ணெய்: 10 முதல் 12 கிராம்பை பொடியாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், இந்த பொடியில் 2 டேபிள் ஸ்பூன் வேப்ப எண்ணெய் கலந்து முடியின் வேர்ப்பகுதி மற்றும் முடிகளில் நன்றாக தேய்த்து 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என ஒரு மாதம் செய்தால் பேன்கள் முற்றிலுமாக நீங்கி விடும்.

பேன் மருந்து: தலையில் உள்ள பேன்களை நீக்குவதற்கு என மருந்து கடைகளில் ஷாம்புக்கள் கிடைக்கின்றன, அதனை பயன்படுத்தலாம். ஆனால் இவற்றை ஒரு முறை பயன்படுத்திய பின்னர், 7 நாட்கள் அல்லது 10 நாட்களுக்குள் மறுபடியும் பயன்படுத்த வேண்டும். இந்த மாதிரி 2 முதல் 4 மாதங்களுக்கு பயன்படுத்தினால் பேன்கள் மற்றும் ஈறுகள் முற்றிலுமாக நீங்கும்.

பேன் சீப்பு: இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பேன் சீப்பை பயன்படுத்தி முடியை வாரி வருவது ஒரு சிறந்த தீர்வாகும். எந்த கெமிக்கலும் இல்லாமல், பேன்களை நீக்க இதுவே சிறந்த முறை என்கின்றனர் மருத்துவர்கள்.

பேன்களை வாரி எடுக்க ஸ்டீல் பேன் சீப்புகள் சிறந்த தீர்வு
பேன்களை வாரி எடுக்க ஸ்டீல் பேன் சீப்புகள் சிறந்த தீர்வு (Credits - ETVBharat)

ஸ்டீல் பேன் சீப்பு: பொதுவாக, மார்கெட்டில் கிடைக்கும் பிளாஸ்டிக் பேன் சீப்புகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, பேன்களை நீக்குவதற்கு என ஸ்டீல் பேன் சீப்புகள் விற்கப்படுகிறது. அதை பயன்படுத்துவது சிறந்தது என்கின்றனர். இந்த சீப்பை பயன்படுத்திய பின்னர், சுடு தண்ணீரில் சிறிது டிடெர்ஜென்ட் பவுடரை சேர்த்து ஊற வைத்து கழுவினால் போதுமானது.

இதையும் படிங்க:

பாத வெடிப்பிற்கான காரணம் என்ன? வந்தால் என்ன செய்வது? இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

முழங்கை,கால்கள் கருமையா இருக்க?..ஒரே வாரத்தில் கலரா மாற 10 சூப்பர் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.