சென்னை: அழகான, அமைதியான கிராமிய சூழல் மற்றும் பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வரலாற்றுப் படிவங்களை தன்னகத்தே சுமந்து இருக்கிறது இந்த குட்டி தீவு. கண்களுக்கு ரம்மியமான காட்சி, இந்தியத் துணைக்கண்டத்தின் தன்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் உள்ள இந்த தீவு சுற்றுலாத் தலங்களுக்குப் பெயர் பெற்றது.
இந்த கோடையைக் கொண்டாடக் கப்பல் மூலமாக இலங்கை செல்லுங்கள், விடுமுறையின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள். "கார்டெலியா கப்பல்கள்" கடல் வழி சுற்றுலாவிற்கான ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது. அந்த வகையில் இலங்கையின் ... செல்ல ஒருவருக்கு ரூ. 77,855-ல் ஆரம்பிக்கும் கட்டணம் ரூ. 427,119 வரை நீள்கிறது.
இதை ரூம் கேட்டகறி என்ற அடிப்படையில் இன்டீரியர் ரூம், ஓசியன் வியூ ரூம், மினி சூட் ரூம், சூட் ரூம், செயர்மேன்ஸ் சூட் ரூம் என்ற அடிப்படையில் வகை பிரித்துள்ளனர். அதேபோல் சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் வரை கட்டணம் மாறுபடுகிறது. இதில் தங்கும் இடம், உணவு மற்றும் எண்டெர்டைன்மென்ட்-கான அனைத்தும் உள்ளடங்கும்.
இலங்கை செல்லும்போது நீங்கள், அம்பாந்தோட்டை (Hambantota), யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும், திருகோணமலை (Trincomalee) உள்ளிட்ட பல முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்த்துக் கண்டுகளிக்கலாம். இலங்கையின் உணவு மிகப் பிரபலமான கலாச்சாரம், ஆரோக்கியம் மற்றும் சுவையை உள்ளடக்கியது. நீங்கள் சுற்றுலா செல்லும் பொழுது, அந்நாட்டின் மிக முக்கிய உணவு வகைகளை உட்கொள்ள மறக்க வேண்டாம்.
கேரள உணவு வகைகளுடன் ஒத்துப்போகும் வகையில் இலங்கையின் உணவுகள் இருக்கும் எனக்கூறப்படும் நிலையில் அது உண்மைதானா என்பதை நீங்களே உட்கொண்டு பாருங்கள். குறிப்பாக, இலங்கை அரிசி மற்றும் கறி, கொட்டு ரொட்டி, அப்பம், இடியாப்பம், இலங்கை நண்டு கறி, போலோஸ், வத்த பாலம், உள்ளிட்ட பல ஸ்பெஷல் உணவுகளாக உள்ளன.
அதிலும் குறிப்பாகக் கடற்கரையோரங்களில் விதவிதமான மீன் வகை உணவுகள் உங்களைக் கட்டாயம் கவறும். இந்த கோடை விடுமுறையைக் கப்பல் மார்க்கமாக இலங்கை சென்று கொண்டாடுங்கள். (குறிப்பி: கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள "cordelia cruises" இணையதளத்தைப் பார்க்கவும்.)
இதையும் படிங்க: காத்திருப்பு அழகா? அவஸ்தையா? ஆய்வு கூறுவது என்ன? - Waiting Causes Anxiety Mood Changes