வாஷிங்டன் டிசி: உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள், பரபரப்பான சர்வதேச சூழலில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை விட முன்னிலையில் இருந்து வருகிறார்.
குறிப்பாக, இண்டியானா (Indiana), மேற்கு விர்ஜினியா (West Virginia), கெண்டகி (Kentucky), ஃபுளோரிடா (Florida), டெக்சாஸ் மற்றும் ஓஹியோ ஆகிய பகுதிகளில் குடியரசுக் கட்சியின் ட்ரம்ப் வெற்றி பெற்று உள்ளார். இதில் ஃபுளோரிடா மாகாணத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ட்ரம்ப் தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
#WATCH | #USElections2024 | USA: Security visuals from White House in Washington DC; barricading done outside the building pic.twitter.com/IphbyhSJVD
— ANI (@ANI) November 5, 2024
அதேநேரம், கமலா ஹாரிஸ் கொலராடோ, டெலாவேர், இல்லினாய்ஸ், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், நியூயார்க், ரோட் தீவு மற்றும் வெர்மான்ட் ஆகிய பகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், மொத்தமுள்ள 538 எல்கடோரல் வாக்குகளில், 270 எலக்டோரல் வாக்குகளுக்கு மேல் பெற்றால் வெற்றி என்ற இலக்கில், தற்போதைய நிலவரப்படி ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி 227 எலக்டோரல் வாக்குகளையும், கமலா ஹாரிஸின் ஜனநாயகக் கட்சி 172 எலக்டோரல் வாக்குகளையும் பெற்றுள்ளது.