ETV Bharat / international

"ஒட்டுமொத்த தேசமும் மறுசீரமைக்கப்படும்" - பிரிட்டனின் புதிய பிரதமராக உள்ள கியெர் ஸ்டார்மர் உறுதி! - uk general election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 1:56 PM IST

பதினான்கு ஆண்டுகள் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதையடுத்து, ஒட்டுமொத்த தேசமும் மறுசீரமைக்கப்படும் என்று பிரிட்டனின் புதிய பிரதமராக விரைவில் பொறுப்பேற்கவுள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கியெர் ஸ்டார்மெர் உறுதியளித்துள்ளார்.

தொழிலாளர் கட்சி தலைவர், கியார் ஸ்டார்மர்
தொழிலாளர் கட்சி தலைவர், கியார் ஸ்டார்மர் (Image Credit - ANI)

லண்டன்: நாட்டை ஒட்டுமொத்தமாக மறுசீரமைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தங்களுக்கு உள்ளது என்று பிரிட்டனின் புதிய பிரதமராக விரைவில் பொறுப்பேற்க உள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கியொ் ஸ்டாா்மா் கூறியுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நேற்று (ஜுலை 4) நடைபெற்றது. மொத்தமுள்ள 650 தொகுதிகளுக்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை முதல் முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க, குறைந்தபட்சம் 326 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி உள்ளதுடன், 200-க்கும் அதிகமான இடங்களில் முன்னணியும் வகித்து வருகிறது. இதனால், அக்கட்சியின் வெற்றி அனேகமாக உறுதியாகிவிட்டது. இதையடுத்து தொழிலாளர் கட்சித் தலைவர் கியெர் ஸ்டார்மர், பிரிட்டனின் புதிய பிரதமராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

"கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு, நாட்டை ஒட்டுமொத்தமாக மறுசீரமைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது" என்று கியெர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றிப் பெற்றதையடுத்து, மத்திய லண்டனில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற் பிரம்மாண்ட பேரணியில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் "மாற்றத்துக்காக நீங்கள் (கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்) போராடினீர்கள்; பிரசாரத்தை முன்னெடுத்தீர்கள்; அதற்காக வாக்களித்தீர்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும் நேரம் தற்போது வந்துவிட்டது. மாற்றுத்துக்கான நேரம் தற்போது தொடங்கிவிட்டது. இந்த வெற்றி பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. நாட்டிற்காக சேவையாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்" என்று ஸ்டார்மர் பெருமிதத்துடன் பேசினார்.

"நாட்டு மக்களுக்கு சேவையாற்றும் அரசியல் பாதைக்கு நாம் திரும்பியுள்ளோம். மக்களுக்கு தொண்டாற்ற அரசியல் சிறந்த வழி என்பதை நாம் நிரூபிக்க வேண்டும், இந்த சகாப்தத்தில் அரசியல் கடும் சோதனைகளை சந்தித்துவரும் நிலையில்,. எவ்வித தவறுக்கு இடமளிக்காமல், மக்கள் பணியாற்ற வேண்டும் என்றும் தமது உரையில் ஸ்டார்மர் குறிப்பிட்டார்.

முன்னதாக. பிரிட்டன் நாடாளுமன்றத் தோ்தலில் எதிா்க்கட்சித் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் எனவும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தற்போதைய பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல்: ரிஷி சுனக் தோல்வி? கருத்து கணிப்பு கூறுவது என்ன? தமிழர்கள் வசமாகுமா நாடாளுமன்றம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.