ETV Bharat / international

ஆஸ்திரேலியாவில் ஷாப்பிங் மாலில் கத்திக்குத்து: 5 பேர் படுகொலை! என்ன நடந்தது? - Sydney Shopping mall Attack - SYDNEY SHOPPING MALL ATTACK

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் வரை படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 13, 2024, 3:27 PM IST

சிட்னி : ஆஸ்திரேலியாவின் போண்டி ஜங்சன் புறநகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் திடீர் கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். வணிக வளாகத்தில் ஆங்காங்கே நிரம்பி வழிந்த பொது மக்களை திடீரென கத்தியால் தாக்கி மர்ம நபர்கள் கொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கத்திக் குத்து தாக்குதலில் ஏறத்தாழ 5 பேர் வரை படுகொலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.

இருப்பினும், மற்றவர்கள் குறித்த தகவல்கள் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. பொது மக்களில் கலந்து மீண்டும் இது போன்ற கொடூர தாக்குதல்களில் ஈடுபடக் கூடும் என்பதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வணிக வளாகத்தில் மூலை முடுக்குகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த கோர தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மக்கள் பலர் வணிக வளாகத்தின் கடைகளில் ஒளிந்து கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விண்வெளி சுற்றுப்பயணம் செல்லும் முதல் இந்தியர்! யார் இந்த கோபிசந்த் தொடகூரா? ஜெப் பெசாஸின் ப்ளூ ஆர்ஜின் சாதிக்குமா? - Gopichand Thotakura

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.