கொழும்பு: இலங்கையின் 9வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 13 ஆயிரத்து 400க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவிற்குப் பிறகு, வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து, மாலை 6 மணியளவில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.
இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரா குமாரா திசநாயகே மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் அவரது வெற்றி முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, 24 லட்சத்து 59 ஆயிரத்து 993 வாக்குகள் பெற்று 39.44 வாக்கு சதவீதத்துடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். இதனால் அனுரா குமாரா திசநாயகேவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யபட்டுள்ளது.
STORY | Dissanayake on way to become Sri Lankan President, postal voting results suggest
— Press Trust of India (@PTI_News) September 21, 2024
READ: https://t.co/Mep8nYFuh1 pic.twitter.com/WppJBECHr5
இருப்பினும், இதற்கு அடுத்ததாக சமாகி ஜனா பலாவேகயா கட்சியின் சஜித் பிரேமதசா 21 லட்சத்து 24 ஆயிரத்து 298 வாக்குகள் உடன் 34.06 சதவீத வாக்குகள் பெற்று கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளார். இவர்களது வாக்கு சதவீத வித்தியாசம் 5.38 ஆக உள்ளது. மேலும், ரணில் விக்கிரமசிங்கே 10 லட்சத்து 94 ஆயிரத்து 426 வாக்குகள் பெற்று, 17.55 சதவீத வாக்குகளுடன் உள்ளார்.
இதையும் படிங்க: இலங்கையின் அடுத்த அதிபர் யார்? விறுவிறுப்பாக நடக்கு வாக்கு எண்ணிக்கை.. ஊரங்கு உத்தரவு அமல்
இதனால், மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுரா குமாரா திசநாயகேவுக்கு அடுத்ததாக இலங்கையின் தற்போதைய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா (சமாகி ஜனா பலாவேகயா கட்சி) மற்றும் தற்போதைய அதிபரும், சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கே உள்ளனர்.
மேலும், இலங்கை அதிபார் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.