ETV Bharat / international

10 இந்திய மீனவர்களின் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்த இலங்கை நீதிமன்றம்! - international news

Sri Lankan Court: இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களுக்கு வழங்கிய சிறைத்தண்டனையை இடைநிறுத்தம் செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sri Lankan Court
Sri Lankan Court
author img

By PTI

Published : Jan 30, 2024, 8:27 PM IST

இலங்கை: இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 10 இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்தது. மேலும், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அக்டோபர் 24-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு படகின் உரிமையாளருக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுமட்டும் இல்லாது, சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் மீன்பிடிக்குப் பயன்படுத்திய இழுவைப்படகும் பரிமுதல் செய்யப்பட்டது. இரண்டாண்டு சிறைத் தண்டனை என்பது ஐந்தாண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அதாவது மீனவர்கள் தற்போது சிறைக்குச் செல்ல மாட்டார்கள், ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் மூன்று முறை ஆஜராகியுள்ளனர்.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீனவர்களின் தனிப்பட்ட உடைமைகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்குமாறு போலீசாருக்கு நீதிபதி பொன்னுத்துரை கிருஷாந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும், இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள், அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்படும் வரை, கொழும்பின் புறநகர்ப் பகுதியான மிரிஹானவில் உள்ள குடிவரவு தடுப்பு மையத்திற்கு அனுப்பப்படுவார்கள்" என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, "இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்சினை சர்ச்சைக்குரிய ஒன்றாகும், இலங்கை கடற்படையினர் பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில் அவர்களின் படகுகளைக் கைப்பற்றியது.

இலங்கையில் இருந்து தமிழகத்தைப் பிரிக்கும் ஒரு குறுகிய நீரோடையான பாக் ஜலசந்தி, இரு நாட்டு மீனவர்களின் வளமான மீன்பிடித் தளமாகும். சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த மாதத்தில் 20-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 2023 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக 240 இந்திய மீனவர்கள் 35 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்." என்று தனது கருத்துக்களைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழப்பு! என்ன நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.