ETV Bharat / international

தென்கொரிய அதிபரின் அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்த எதிர்க்கட்சிகள்...அதிபரை பதவி நீக்கும் தீர்மானமும் தாக்கல்! - SOUTH KOREA

தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்த அதிபர் அதிபர் யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அந்த நாட்டின் எதிர்கட்சிகள் தாக்கல் செய்துள்ன.

தென்கொரிய எதிர்கட்சியான ஜனநாய கட்சியின் எம்பிக்கள் அதிபருக்கு எதிராக போராட்டம்
தென்கொரிய எதிர்கட்சியான ஜனநாய கட்சியின் எம்பிக்கள் அதிபருக்கு எதிராக போராட்டம் (Image credits-AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2024, 7:20 PM IST

சியோல்: தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்த அதிபர் யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அந்த நாட்டின் எதிர்கட்சிகள் தாக்கல் செய்துள்ளன. தென்கொரிய முக்கிய எதிர்கட்சியான ஜனநாய கட்சி மற்றும் ஐந்து இதர சிறிய எதிர்கட்சிகளும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இதன் மீதான ஓட்டெடுப்பு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் நேற்று அதிரடியாக அறிவித்தார். எதிர்க்கட்சிகள் கிளர்ச்சியை ஏற்படுத்த சதி செய்வதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தியை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் நேற்று இரவு தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, "தமது தலைமையிலான அரசின் நிர்வாகத்தை முடக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன" என்று அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும், "ஜனநாயகத்தின் அடித்தளமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றம் அதை அழிக்கும் இடமாக மாறிவிட்டது" எனவும் அவர் பேசியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தியை மேற்கோள்காட்டி ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில், அதிபர் பிறப்பித்த அவசர நிலை பிரகடனம் ஆறுமணி நேரம் மட்டுமே அமலில் இருந்தது. தேசிய அவையானது, அதிபரின் முடிவுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியது. இதையடுத்து தென்கொரிய நேரப்படி காலை 4.30க்கு அவசர நிலை பிரகடனம் விலக்கப்பட்டது.இந்த நிலயில் அதிபரின் ஆலோசகர்கள், செயலாளர்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர். அதே போல அதிபரின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக உள்ள கிம் யோங் ஹியூன் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.

இதையும் படிங்க: பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் பாதலை கொல்ல முயற்சி...துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற நபர் பிடிபட்டார்!

தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எதிர்கட்சிகள் தாக்கல் செய்துள்ளன. யூன் சுக் யோலை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதே போல ஆறு அரசியல் சட்ட நீதிமன்ற நீதிபதிகள் ஆதரவும் தேவை. இதையடுத்து முக்கிய எதிர்கட்சியான ஜனநாயக கட்சி மற்றும் இதர ஐந்து சிறிய எதிர்கட்சிகளும் அதிபரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளன. இது வெள்ளிக்கிழமை அன்று ஓட்டெடுப்புக்கு விடப்படும்.

“அதிபர் யூன் சுக் யோலின் அவசர நிலைப் பிரகடனம் அரசியலமைப்பின் தெளிவான மீறலாகும். அந்த அறிவிப்புக்கு இணங்கத் தேவையில்லை, ”என்று ஜனநாயகக் கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "அவரது அவசர நிலை பிரகடன அறிவிப்பு செல்லாதது மற்றும் அரசியலமைப்பின் கடுமையான மீறல். இது ஒரு கடுமையான கிளர்ச்சிச் செயலாகும், மேலும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதற்கு இதுவே சரியான காரணமாக இருக்கிறது," என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிபரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 300 உறுப்பினர்களில் 200 பேரின் ஆதரவு தேவைப்படும். ஜனநாயகக் கட்சி மற்றும் பிற சிறிய எதிர்க்கட்சிகள் இணைந்து 192 இடங்களைப் பெற்றுள்ளன. அதிபரின் அவசர நிலை பிரகடனத்தை 190-0 வாக்குகளில் நாடாளுமன்றம் நிராகரித்தபோது, ​​அதிபரின் ஆளும் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த 18 உறுப்பினர்களும் அதை ஆதரித்துள்ளனர்.

தென்கொரியாவின் பிரதமராக உள்ள ஹான் டக்-சூ, அரசின் இரண்டாவது நிலையில் உள்ளார். இப்போதைக்கு இவர் அதிபருக்கு பதிலாக செயல்படுவார். அரசியலமைப்பு நீதிமன்றத்தில் உள்ள 9 நீதிபதிகளில் 6 நீதிபதிகளாவது அதிபரின் பதவி நீக்கத்தை ஆதரிக்க வேண்டும். ஆனால், இப்போது அரசியலமைப்பு நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டதால் இப்போது 6 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். எனவே புதிய நீதிபதிகள் நியமிக்க வேண்டிய சூழலும் அங்கு நிலவுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.