அபுஜா (நைஜீரியா): நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று, ஜிகாவா மாநிலத்தின் மஜியா நகரில் நள்ளிரவில் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் லாவன் ஆடம் தெரிவித்தார்.
திடீர் தீ விபத்து: மேலும் இதுகுறித்து பேசிய அவர், “அந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கீழே கவிழ்ந்த நிலையில் அதில் இருந்து பெட்ரோல் வடிய தொடங்கியுள்ளது அதை கண்ட மக்கள் அந்த டேங்கரில் இருந்து எரிபொருளை பிடித்து வைக்க கூட்டமாக கூடிய நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது” என்றார்.
தீயில் சாம்பலான மக்கள்: இதுகுறித்து பேசிய பிராந்தியத்தின் தேசிய அவசரகால மேலாண்மை அமைப்பின் தலைவர் நுரா அப்துல்லாஹி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறுகையில், “இந்த தீ விபத்தில் 140 பேர் பலியான நிலையில் 12 பேர் படுகாயத்துடன் சிகிச்சையில் இருக்கின்றனர். இறந்தவர்கள் யார் என்ற அடையாளம் கண்டறிய முடியாத வகையில் அவர்களது உடல்கள் சிதைந்துள்ளன.
இதையும் படிங்க: 2025-26 ரபி சந்தைப் பருவப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆப்பிரிக்காவும் எரிப்பொருள் தேவையும்: ஆப்பிரிக்காவில் மக்கள்தொகை அதிகமாக உள்ள நாடு நைஜீரியா. பல இடங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படாததால், சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு திறமையான இரயில்வே அமைப்புகள் இங்கு இல்லை.
ஆகவே இங்கு இது போன்று டேங்கர் விபத்துக்கள் ஏற்படுவது வழக்கம். இது போல் நிகழும் போது மக்கள் கப் மற்றும் வாளிகளில் எரிபொருளைக் மகிழ்ச்சியுடன் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.
காரணம் எரிபொருளின் விலை உயர்ந்து வருவதால் எனலாம். ஆண்டு தொடக்கத்தில் இருந்து அரசாங்கம் விலையுயர்ந்த எரிவாயு மானியங்களை நிறுத்தியுள்ளது. அதனால் அதன் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
டேங்கர் விபத்துக்கு காரணம்: இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வரும் ஜிகாவா போலீஸ் கமிஷனர் அகமது அப்துல்லாஹி கூறுகையில், “ இந்த டேங்கரை ஓட்டி வந்தவர் கானோ மாநிலத்தில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் (68 மைல்) தூரம் பயணித்து இந்த சாலையை அடைந்துள்ளார். பின் அவரது கவன குறைவாலும், வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாலும் விபத்து ஏற்பட்டுள்ளது. பின் பற்றிய தீ வேகமாக பரவியதால் பலர் தப்பிக்க முடியமால் திணறி இறந்துள்ளனர். பலர் எரிந்து சாம்பலாகியுள்ளனர்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்