லண்டன்: பிரிட்டனில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் 650 தொகுதிகளில், 412 தொகுதிகளைக் கைப்பற்றி தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கிறது. மேலும், கடந்த முறை ஆட்சியில் இருந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி (Conservative Party) 119 தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வி அடைந்துள்ளது.
I have given this job my all. But you have sent a clear message, and yours is the only judgement that matters.
— Rishi Sunak (@RishiSunak) July 5, 2024
This is a difficult day, but I leave this job honoured to have been Prime Minister of the best country in the world.https://t.co/EhNsfIaGWM
இந்நிலையில், இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன் என அக்கட்சியின் தலைவரும், பிரிட்டனின் முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், அவரது பிரியாவிடை உரையில் கூறியதாவது, "நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
அக்கட்சியின் கெய்ர் ஸ்டார்மரை தொடர்பு கொண்டு, அவருக்கு எனது வாழ்துகளை தெரிவித்தேன். மேலும், ஆட்சி அதிகாரம் அமைதியான முறையில் கைமாறியுள்ளது. நமது நாட்டின் எதிர்காலம் குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்சி அமைய வேண்டும்.
மேலும், இந்த தோல்விக்கு நானே முழுப்பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். ஒரே இரவில் தங்கள் பதவிகளை இழந்த எனது கட்சி சகோதரர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். மேலும், கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் நான் விலகவுள்ளேன். அடுத்த தலைவரை தேர்வு செய்த பிறகு அது குறித்த அறிவிப்பு வெளியாகும்" எனத் தெரிவித்தார்.
மேலும், ரிஷி சுனக் போட்டியிட்ட வடக்கு இங்கிலாந்தில் உள்ள ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் (Richmond and Northallerton) தொகுதியில் 23 ஆயிரத்து 59 வாக்குகள் பெற்று மக்களவையில் தனக்கான இருக்கையை தக்கவைத்துக் கொண்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சியின் டாம் வில்சன் 10 ஆயிரத்து 874 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: பிரிட்டனின் முதல் தமிழ் எம்பி உமா குமரன்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்து!