இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இரண்டு மகன்கள் ஹுசைன் மற்றூம் ஹசன் நவாஸ் ஆகியோர் மீது மூன்று முறைகேடு வழக்குகளில் பிடிவாரண்டு உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. மூன்று வழக்குகளில் வழங்கப்பட்ட பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யக் கோரி இருவரும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து உள்ளனர்.
பனாமா பேப்பர்ஸ் உள்ளிட்ட முறைகேடு வழக்குகளில் மூன்று முறை நவாஸ் ஷெரீப்பின் இரு மகன்கள் மீது முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மார்ச் 12ஆம் தேதிக்குள் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அவென்பீல்ட் அடுக்குமாடி குடியிருப்பு, Al-Azizia, முதலீடு மோசடி உள்ளிட்ட வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யக் கோரி இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் ஹுசைன் மற்றும் ஹசன் நவாஸ் ஆகியோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், நீதிபதி நசீட் ஜாவத் ரானா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட வழக்கறிஞர் காசி மிஸ்பா, முறைகேடு வழக்குகளில் ஹசன் மற்றும் ஹுசைன் சவுதி அரேபியா மற்றும் லண்டனில் உள்ளதாகவும் மார்ச் 12ஆம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளதாகவும் அதற்கு முன்னதாக பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்குகளில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீப், அவரது மகன் மர்யம் நவாஸ், ஓய்வு பெற்ற கேப்டன் சப்தர் ஆகியோர் தொடர்புடையதாகவும் அவர்கள் வழக்கில் இருந்து தற்காலிக நிவாரணம் பெற்று உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையும் படிங்க : முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன்! நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?