ETV Bharat / international

சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம்! முழு இந்திய எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்கும் முய்சு! மத்திய அரசின் நடவடிக்கை என்ன? - மாலத்தீவு இந்தியா பிரச்சினை

Mohammed Muizzu: சீனாவுடனான ராணுவ ஒப்பந்தத்தை தொடர்ந்து மாலத்தீவில் சிவில் உடையில் கூட இந்திய வீரர்களை அனுமதிக்க முடியாது என அந்நாட்டு அதிபர் முகமது முய்சு தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mohammed Muizzu
Mohammed Muizzu
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 3:54 PM IST

டெல்லி : மாலத்தீவுடனான உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், ராணுவ வீரர்களுக்கு பதிலாக சிவில் மக்களை பணியில் ஈடுபடுத்த இந்தியா, அந்நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில், மே 10ஆம் தேதிக்கு பின்னர் எந்த ஒரு உடையிலும் இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தெரிவித்து உள்ளார்.

Baa atoll தீவின் தலைநகரான Eydhafushi-யில் நடந்த கூட்டத்தில் பேசிய மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மே 10ஆம் தேதிக்கு பின்னர் மாலத்தீவில் எந்தவொரு இந்திய ராணுவ துருப்பும் இருக்க மாட்டார்கள் எனக் கூறி உள்ளார். மேலும் அவர், ராணுவ சீருடையில் மட்டுமின்றி பொது உடையில் உள்ள இந்திய ராணுவ துருப்புகள் மாலத்தீவில் வசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இதை தான் நம்பிக்கையுடன் கூறுவதாகவும் முகமது முய்சு கூறி உள்ளார்.

மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை இந்திய ராணுவம் நிர்வகித்து வந்தது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் 88 பேர் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். அவர்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு டோர்னியர் விமானத்தைப் பயன்படுத்தி, கடந்த சில ஆண்டுகளாக மாலத்தீவு மக்களுக்கு மருத்துவ தேவைகளுக்கான போக்குவரத்து வசதிகளை வழங்கி வந்தனர்.

இந்நிலையில், சீன ஆதரவாளராக அறியப்படும் முகமது முய்சு, மாலத்தீவின் அதிபராக பொறுப்பேற்றது முதல் இந்திய எதிர்ப்பு அரசியல் கொள்கையை மேற்கொண்டு வருகிறார். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினரை வெளியேற்றுவதில் அதிதீவிரம் காட்டி வரும் முய்சு, மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ துருப்புக்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டார்.

இதனிடையே இரு தரப்பிலும் உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய முகமது முய்சு, மாலத்தீவின் மூன்று விமான தளங்களில் இந்திய ராணுவ துருப்புகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு விமான தளத்தில் உள்ள ராணுவ துருப்புகள் மார்ச 10ஆம் தேதிக்குள் வெளியேற்றப்படும் என்றும் மீதமுள்ள 2 விமான தளங்களில் உள்ள இந்திய துருப்புகள் மே மாதம் 10ஆம் தேதிக்குள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

முதற்கட்ட இந்திய ராணுவ தருப்புகளை மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இதனிடையே மார்ச் 10ஆம் தேதி வெளியேறும் ராணுவ துருப்புகளுக்கு பதிலாக விமான தள பராமரிப்பு பணியில் இந்திய தொழில்நுட்ப குழு ஈடுபட உள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் விமான தளத்தை விட்டு வெளியேறியதும் தொழில்நுட்ப குழு தளத்தை பொறுப்பை எடுத்துக் கொள்ளும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் தான், ராணுவ உடையின்றி பொது உடையில் வரும் எந்தவொரு இந்திய குழுவையும் மாலத்தீவில் அனுமதிக்க மாட்டோம் என அதிபர் முகமது முய்சு தெரிவித்து உள்ளார். இதனிடையே, சீனாவுடனன ராணுவ ஒப்பந்தத்தில் மாலத்திவு கையெழுதிட்டு உள்ளது. சீனா வழங்கும் ராணுவ தளவாடங்களை அதன் முனைகளில் நிலை நிறுத்த மாலத்தீவு அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : கர்நாடக அரசுக்கு வெடிகுண்டு மிரட்டல்! இமெயிலில் வந்த மிரட்டல்! பின்னணியில் யார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.