மாலே (மாலத்தீவு): மாலத்தீவு நாட்டின் 20வது நாடாளுமன்றத் தேர்தல், அந்நாட்டில் உள்ள 93 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. முன்னதாக மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்த விமர்சன கருத்து தெரிவித்தது. அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவின் சீனாவுடனான உறவு, இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
இதனிடையே, மாலத்தீவு நாட்டில் நடைபெற்ற இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட நிலையில், அதிபர் முகம்மது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (People's National Congress) கட்சி பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. முன்னதாக, 86 தொகுதிகளின் முடிவுகள் வெளியான நிலையில், 66 தொகுதிகளை முய்சுவின் காட்சி (PNC) கைபற்றியது.
குறிப்பாக, முய்சுவின் கட்சி வெற்றி பெறத் தேவைப்படும் பெரும்பான்மையான 47 தொகுதிகளை விட 19 தொகுதிகள் அதிகமாகக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மாலத்தீவு இந்தியாவுடனான தொடர்பைத் தவிர்த்துவிட்டு, சீனாவின் பக்கம் சாய்ந்தாலும் அந்நாட்டு மக்களின் ஆதரவு பெற்றுள்ளதைக் காட்டுகிறது.
இதையும் படிங்க: எலான் மஸ்கின் இந்திய பயணம் திடீர் ஒத்திவப்பு! என்ன காரணம்?
முய்சுவின் 'இந்தியா அவுட்' கொள்கை: சீனாவுடனான நெருங்கிய உறவிற்குப் பெயர் போன முகமது முய்சு. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மாலத்தீவிற்குச் சீனா ராணுவ உதவிகளை வழங்குவது குறித்து உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இது இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனா தனது ராணுவத்தை விரிவு படுத்த ஒரு வாய்ப்பாக அமையக்கூடும் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்த உடன்படிக்கை இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உள்ள இந்திய ராணுவத்தின் திரும்பப்பெற எச்சரிக்கையாக இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. மாலத்தீவு - சீனா இடையேயான இந்த நெருக்கம், இந்தியா உட்படப் பல நாடுகள் தங்களது கடல்சார் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், மாலத்தீவு நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளை இந்தியா அலட்சியமாகப் பார்க்கக்கூடாது. காரணம் இந்தியா மற்றும் சீனா இடையேயான உறவில் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், முய்சுவின் வெற்றி இந்தியப் பெருங்கடல் நிலவும் சமநிலையைப் பாதிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இஸ்ரேலின் அண்மை தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்