லன்டன்: இங்கிலாந்து கிழக்கு லண்டனில் பொது மக்கள் மத்தியில் தோன்றிய மர்ம நபர் கண்மூடித்தனமாக கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார். இந்த திடீர் தாக்குதலில் படுகாயம் அடைந்த 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தொடர்ந்து அங்கிருந்த பொது மக்கள் மீதும் மர்ம நபர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த தாக்குதலை தடுக்க முயன்ற போலீசாரையும் அந்த மர்ம நபர் கத்தியால் குத்தி தாக்கி உள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் போலீசார் 36 வயது மதிக்கத்தக்க நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அந்த நபர் நடத்திய தாக்குதல் 2 போலீசார் உள்பட 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். என்ன காரணத்திற்காக அந்த நபர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார் என தெரியவராத நிலையில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் நிச்சயம் பயங்கரவாத தாக்குதலுக்கான முகாந்திரம் இல்லை என போலீசார் தெரிவித்து உள்ளனர். பிடிபட்ட நபர் குறித்த தகவல்களை போலீசார் வெளியிடாத நிலையில் தொடர்ந்து விசாரித்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: கொலம்பிய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 9 வீரர்கள் பலி! - Colombia Army Helicopter Crash