சியோல்: கோபத்தைத் தூண்டும் வகையில் தென்கொரியா செயல்பட்டால் அந்த நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரிய அதிபரின் எச்சரிக்கை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தென்கொரிய அதிபர், வடகொரியா அணு ஆயுதத்தை உபயோகிக்க முயற்சி செய்தால் கிம் ஜாங் உன் ஆட்சி சீர்குலைந்து விடும் என தெரிவித்துள்ளார்.
இருநாடுகளின் அதிபர்களும் இவ்வாறு ஆவேசமான கருத்துகளை தெரிவிப்பது புதிதல்ல. அண்மையில் வடகொரியா தரப்பில் அணு ஆயுதங்கள் இருப்பு குறித்த தகவல்களை வெளியிட்டது, ஏவுகனைகளை பரிசோதனை செய்தது ஆகியவற்றால் இருநாடுகளுக்கு இடையே திடீரென பரஸ்பரம் வாக்குவாதங்கள் அதிகரித்துள்ளன.
அடுத்த வாரத்தில், வடகொரியாவின் அதிகாரம் ஏதுமற்ற நாடாளுமன்றத்தில் கொரிய தீபகற்பத்தில் விரோதமான இரண்டு நாடுகள் என்று அரசியல் சட்டரீதியாக பிரகடனம் செய்யவும், தென் கொரியாவுடன் நல்லிணக்கத்தை நிராகரிக்கவும், தேசிய எல்லைகளில் புதிய குறியீடுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: "ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க சீனா, வடகொரியா திட்டம்" - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!
புதன்கிழமையன்று சிறப்பு நடவடிக்கை படைகள் பிரிவுக்கு சென்ற கிம் ஜாங் உன், வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்கும் வகையில் தென்கொரியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அணு ஆயுதங்கள் உட்பட எந்த ஒரு ஆயுத த்தையும் உபயோகிக்க தயங்கமாட்டோம் என்று கூறியதாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ மத்திய செய்தி முகமை தெரிவித்துள்ளது. இது போன்ற சூழல் வரும் பட்சத்தில் சியோல் நீடித்திருப்பது, கொரிய குடியரசு என்பது சாத்தியமில்லை என்றும் கிம் ஜாங் உன் பேசியிருக்கிறார்.
கடந்த செவ்வாய்கிழமையன்று தென்கொரிய ஆயுதபடை தினத்தன்று பேசிய அந்நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல், அணு ஆயுதங்களை வடகொரியா உபயோகிக்க முயற்சித்தால், அதுதான் கிம் ஜாங் உன் ஆட்சியின் முடிவாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.