அல்பானி: ஜனநாயக கட்சியின் ராஜினாமாவுக்கு வழிவகுத்த முறைகேடு தொடர்பாக, ஆகஸ்ட் 2021 ல் தொடங்கப்பட்ட விசாரணையில், 13 அரசு ஊழியர்களை, நியூயார்க்கின் முன்னாள் கவர்னர் கியூமோ சட்டவிரோதமாக பாலியல் பணிச்சூழலுக்கு உட்படுத்தியதை அமெரிக்க நீதித்துறை கண்டறிந்துள்ளது.
நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ பாலியல் ரீதியில் தங்களை துன்புறுத்தியதாக பல பெண்கள் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் புகார்களை தெரிவித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக பெண்களிடம் அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இந்த பாலியல் புகார்கள் குறித்து வழக்கறிஞர்கள் மூலமாக சுதந்திரமான விசாரணையை நடத்த லெடிஷியா ஜேம்சுக்கு கவர்னர் அலுவலகம் பரிந்துரை செய்தது.
அதன்படி, 2021 ஆம் ஆண்டு நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் அறிக்கையில், நியூயார்க் கவர்னர் அரசு ஊழியர்கள் உட்பட 11 பெண்களுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், ஜனநாயகக் கட்சியில் இருந்த கியூமோ, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பதவியை விட்டு வெளியேறினார். இதனையடுத்து நீதித்துறை மேற்கொண்ட விசாரணையில் கியூமோ, 13 அரசு ஊழியர்களை பாலியல் விரோதமான பணிச்சூழலுக்கு உட்படுத்தியதாக கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதில், கியூமோவின் வழக்கறிஞர் ரீட்டா கிளாவின், ”முன்னாள் ஆளுநர் யாரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை" என்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீதித்துறையின் விசாரணை முழுவதுமாக மாநில அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்று குற்றம் சாட்டினார்.
மேலும், அமெரிக்காவின் நீதித்துறை விசாரணை, நியூயார்க் அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இது தொடர்பாக அமெரிக்காவின் நீதித்துறை, ஆளுநர் கியூமோவைத் தொடர்பு கொள்ளவில்லை. இன்று வழக்கறிஞர் ரீட்டா கிளாவின் கூறினார்.
கியூமோ ராஜினாமா செய்யும் வரை லெப்டினன்ட் கவர்னராக இருந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கு மாநிலத்தின் நடைமுறைகளை தொடர்ந்து சீர்திருத்த ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். மேலும், நிர்வாக சபையில் இருந்த துன்புறுத்தல் கலாச்சாரத்தை வேரறுக்க வேண்டும் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பாதுகாப்பான பணியிடத்தை மேம்படுத்த வலுவான கொள்கைகளை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: 'ஆளுநர் பதவியை ஒழிப்போம்' என தேர்தல் வாக்குறுதி - இந்தியா கூட்டணிக்கு திருமாவளவன் கோரிக்கை