ETV Bharat / international

ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் கொண்டு வந்த தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா! - resolution in un general assembly - RESOLUTION IN UN GENERAL ASSEMBLY

ஐ.நா. பொது சபையில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. வடகொரியா, கியூபா உள்ளிட்ட ஒன்பது நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன.

ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா
ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா (Credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 4:19 PM IST

நியூயார்க்: உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா உடனடியாக கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி. ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட வரைவு தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா உடனடியாக கைவிடவும், ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தை உக்ரைனிடம் திரும்பத் தர வலியுறுத்தியும் ஐ.நா. பொது சபையில் வரைவு தீர்மானம் நேற்று ( ஜுலை 11) கொண்டு வரப்பட்டது.

ஐ.நாய பொதுச் சபையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவோடு, உக்ரைன் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. இதில், 'உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக கைவிட வேண்டும். இதன் அடையாளமாக, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள உக்ரைன் எல்லைப் பகுதிகளில் இருந்து தமது துருப்புகளை ரஷ்யா எவ்வித நிபந்தனைகளும் இன்றி திரும்பப் பெற வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள , ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தை உக்ரைனிடம் அதிகாரப்பூர்வமாக உடனடியாக ரஷ்யா திரும்ப அளிக்க வேண்டும். அத்துடன் அப்பகுதியில் உள்ள தமது ராணுவத்தை திரும்பப் பெறுவதுடன். அணுமின் நிலையத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் இத்தீர்மானம் ரஷ்யாவை வலியுறுத்துகிறது.

இந்த வரைவு தீர்மானத்தின் மீது ஐ.நா. பொது சபையில் நேற்று (ஜூலை 11) வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், பொது சபையில் உறுப்பினர்களாக உள்ள மொத்தம் 193 நாடுகளில், 99 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், ஒன்பது நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, செளதி அரேபியா, எகிப்து, இலங்கை உள்ளிட்ட 60 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. ரஷ்யா,. பெலாரஸ், கியூபா, வட கொரியா, சிரியா உள்ளிட்ட ஒன்பது நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.

இந்த தீர்மானம் குறித்து ஐ.நா.வுக்கான ரஷ்ய பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி கூறும்போது, " யதார்த்தத்தை பிரதிபலிக்காத, ஒருமித்த கருத்து எட்டப்படாத, அரசியல் உள்நோக்கத்துடன்கூடிய பல தீர்மானங்களை ஐ.நா. பொது சபை ஏற்றுக் கொண்டுள்ளது துரதிருஷ்டவசமானது" என்று உக்ரைன கொண்டு வந்துள்ள இத்தீர்மானத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: நேட்டோ உச்சிமாநாட்டை அமெரிக்கா நடத்துவது அமைதி நோக்கத்துக்காக அல்ல - ரஷ்யா காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.