ETV Bharat / international

எலான் மஸ்கின் இந்திய பயணம் திடீர் ஒத்திவப்பு! என்ன காரணம்? - Elon musk postpone india tour - ELON MUSK POSTPONE INDIA TOUR

உலகின் முன்னணி பணக்காரரும் டெஸ்லா அதிபருமான எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் அவர் இந்தியா வர திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 2:08 PM IST

டெல்லி : உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியா வருவதாக இருந்தது. இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் மோடியை சந்திக்க அவர் திட்டமிட்டு இருந்தார். முன்னதாக கடந்த வாரம் எலான் மஸ்க் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி மையத்தை இந்தியாவில் தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அது குறித்தும் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது எலான் மஸ்க் ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருந்ததாக தகவல் கூறப்படுகிறது.

இதனிடையே, டெஸ்லா நிறுவனத்திற்கு சாதமாக அமையும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் நிறுவனங்களின் கார்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல், இந்த சுற்றுப்பயணத்தின் இடையே அதிவேக இணைய தொடர்புக்கான ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்குவதற்கான அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், துரதிர்ஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் காரணமாக இந்திய பயணத்தை தாமதப்படுத்த வேண்டியதாகிவிட்டது. ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவுக்கு வருகை தருவதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், அப்போது அவரை எலான் மஸ்க் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஒடிசாவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி! முதலமைச்சர் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! - Odish Boat Accident

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.